Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

ஜெ.ரவி

தமிழ்நாடு

ஜெ.ரவி

Published:Updated:
தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

ஐந்து ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய மேட்டூர் அணை!

ர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கே.எஸ்.ஆர் அணைகள் நிரம்பியதால், அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து கடந்த 23-ம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது.  அணை வரலாற்றில் 39-வது ஆண்டாக நேற்று அணை நிரம்பியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டில் முழுமையாக நிரம்பியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அணை நிரம்பியுள்ளது. அணை நிறைந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவிரி ஆறு பாயும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

உலகப் பாம்புகள் தினம்!

லகப் பாம்புகள் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையில், கடந்த 16-ம் தேதி பாம்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புஉணர்வுப் பயிற்சி நடைபெற்றது. இந்த விழிப்புஉணர்வுப் பயிற்சியில் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, பச்சைப் பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளிப் பாம்பு, கட்டுவிரியன், மலைப் பாம்பு ஆகியவைகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பாம்புகள் கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி சிகிச்சைகுறித்தும் விளக்கப்பட்டது.

தமிழ்நாடு

நீட் பயிற்சி - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு!

ரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  கடந்த ஆண்டு நீட் பயிற்சி குறுகிய காலத்தில் தொடங்கியதால், தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வகுப்புகள் நடத்தப்படும். 412 மையங்களில் சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்”எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

 கடுங்குளிரில் ஊட்டி!

சுற்றுலாப் பயணிகளின்றி பொலிவிழந்த ஊட்டி தென்மேற்குப் பருவமழை இடைவிடாது பெய்ததன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகக் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் மழை காரணமாகப் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பாதுகாப்பு கருதி ஊட்டி படகு இல்லத்தில் படகுச் சவாரி நிறுத்தப்பட்டது. இடைவிடாத மழை, கடுங்குளிர் போன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்தது. இதனால் ஊட்டி நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழ்நாடு

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள்!

நெல்லைப் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கனமழை காலங்களில் குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மழை குறைந்ததையடுத்துப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அருவிகளில் குளிக்க மக்கள் குவிந்த வண்னம் உள்ளனர். 

தமிழ்நாடு

தெரியுமா?

இன்சுலின் குறைபாட்டினால் வருவதே நீரிழிவு நோய்.