மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. செல்ஃபோன் போன்ற எப்போதும் உடனிருக்கும் கேட்ஜெட்களை மழைக்காலத்தில் எப்படிப் பாதுகாக்கலாம் என்று டிப்ஸ் ப்ளீஸ்!

- அருணாசலம், மேட்டூர்

காளைப்பாண்டி, மொபைல் ஷோரூம் அட்வைஸர்.

“கேட்ஜெட்களை மழைநீரிலிருந்து பாதுகாப்பதற்கான கருவிகள் சந்தையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினாலும்கூட முழுமையாக மழை நீரிலிருந்து பாதுகாக்க முடியாது. அவசியமென்றால் நீரால் பாதிக்கப்படாத தன்மை கொண்ட கேட்ஜெட்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம். IP67 மற்றும் IP68 சர்டிஃபிகேட் கொண்ட கேட்ஜெட்கள் நீரால் பாதிக்கப்படாத தன்மை கொண்டவை. மொபைல் தவிர்த்து நம்முடன் பெரும்பாலும் இயர்போன், பவர்பேங்க், லேப்டாப் ஆகியவற்றைத்தான் எடுத்துச் செல்வோம். இவற்றை மொத்தமாகப் பாதுகாப்பதற்காக வாட்டர்ஃப்ரூப் பேக்குகளைப் பயன்படுத்தலாம். மொபைலை நனையாமல் பாதுகாப்பதற்காகவே வாட்டர்ஃப்ரூப் கேஸ்கள் இருக்கின்றன. இதனுள்ளே வைத்து மொபைலை லாக் செய்துவிடலாம். ஆனால் அதனுள்ளே இருக்கும்போது ஃபிங்கர்பிரின்ட் சென்சாரைப் பயன்படுத்த முடியாது. எங்களிடம் சரி செய்வதற்காகக் கொண்டு வரப்படும் மொபைல்கள் பெரும்பாலும் பழுதாவதற்குக் காரணம் அவை முழுமையாக உலர்வதற்கு முன்னரே ஆன் செய்யப்பட்டு விடுவதுதான். நீரில் நனைந்திருக்கும்போது மொபைலை ஆன் செய்தால் அது முழுவதுமாக பாதிப்படையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மொபைல் போன் நீரில் நனைந்துவிட்டால் அதை உடனே அணைத்துவிட வேண்டும். முழுவதுமாக உலர்ந்துவிட்டது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு வேண்டுமானால் ஆன் செய்து பார்க்கலாம். இல்லையென்றால் நேரடியாக மொபைல் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வது நல்லது.

ஆங்கிலத்தில் ஒரு சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான புத்தகங்கள் சந்தையில் நிறைய கிடைக்கின்றன. தமிழில் அதுபோல வார்த்தை உச்சரிப்புக்கான புத்தகங்கள் உள்ளனவா?

- ராஜி, சென்னை.

- பேராசிரியர் வீ.அரசு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் (ஓய்வு)

``ஆங்கிலத்தில் உச்சரிப்புக்கு உள்ளது போன்று தமிழில் பெயர் சொல்லும் அளவுக்கு நூல்கள் இல்லை. ஆனால், மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (Central Institute of Indian Languages), தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலிநாடாக்களையும் குறுந்தகடுகளையும் தயாரித்துள்ளது. இவை விற்பனையும் செய்யப்படுகின்றன. தபால் மூலமும் பெறலாம். http://www.ciil.org என்ற தளத்தில் இதுபற்றிய விவரங்கள் உள்ளன.”

நான் இந்த ஆண்டு முதல் வீட்டுக்கடன் செலுத்தவுள்ளேன். மாதந்தோறும் நான் கட்டுகிற ஈஎம்ஐ தொகை என் வருமானவரி தாக்கல் செய்யும்போது எப்படிக் கழிக்கப்படும் என்று விளக்க முடியுமா?

- கருப்பசாமி, குன்றத்தூர்.

- சொக்கலிங்கம் பழனியப்பன், நிதி ஆலோசகர்.

“நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி, அதே வீட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வீட்டுக் கடனில் செலுத்தும் அசலுக்கு வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச்சலுகை 80சி பிரிவின் கீழ் எடுத்துக்கொள்ளலாம். இதே பிரிவின் கீழ்தான் பி.எஃப், பி.பி.எஃப், டேக்ஸ் சேவிங் மியூச்சுவல் ஃபண்டுகள், லைஃப் இன்ஷூரன்ஸ், பள்ளிக் கட்டணம் போன்றவையும் வரும் என்பதை நினைவில் கொள்க. ஆகமொத்தம் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சத்துக்கு மட்டுமே வரிச்சலுகை.

கடனுக்காகச் செலுத்தும் வட்டிக்கு ரூ. 2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகையை 24 பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மேலும் ரூ. 50,000 வரை செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும். ஆனால் அந்த வீடு ரூ. 50 லட்சத்திற்குள்ளாகவும், அந்த வீட்டிற்காக வாங்கிய கடன் ரூ. 35 லட்சத்திற்குள்ளாகவும் இருப்பது அவசியம்.”

என் மகன் (8 வயது) பெரும்பாலான நேரங்களில் மொபைல் போனில் விளையாடிக்கொண்டிருக்கிறான். மொபைல் அடிக்ஷன் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவன் மனம் கோணாமல் இந்த விஷயத்தை நான் எப்படிக் கையாளுவது என்று சொல்லுங்களேன்.

- ரோகிணி, ஆதம்பாக்கம்

- ஜெயந்தினி, குழந்தைகள் மன நல மருத்துவர்.

“மொபைல் போன்களைக் குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதற்குப் பெரும்பாலும் பெரியவர்களே காரணமாக இருக்கிறார்கள். தங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்கள் அங்கிருந்துதான் அவர்கள் மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இன்றைய காலத்தில் எந்தக் குழந்தையும் மொபைலை முற்றிலும் தவிர்த்துவிட்டு வளரமுடியாது. ஆனால், அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதில்தான் பிரச்னையே தொடங்குகிறது. முதலில் குழந்தைகள் அருகில் இருந்தால் பெரியவர்கள் மொபைலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் மகனுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். மொபைல் தவிர்த்து வேறு எதில் உங்கள் மகன் ஆர்வமாக இருக்கிறான் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதைச் செய்வதற்கு ஊக்கம் கொடுத்து வாருங்கள். படிப்படியாக மொபைலிலிருந்து அவனுடைய கவனம் திசை மாறும். அப்படியும் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலோ தினசரி நடவடிக்கைகளில் இயல்புக்கு மாறான மாற்றம் தெரிந்தாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது”

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!