Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்

Published:Updated:
டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டெக் பிட்ஸ்
டெக் பிட்ஸ்

சிலந்தியுடன் ஆட்டம்!

குழந்தைகளின் எவர் நாயகனான ஸ்பைடர்மேன் படத்தில் செய்யும் அத்தனை சாகசங்களையும் செய்வதற்குக் களமிறங்குகிறது மார்வெல் ஸ்பைடர்மேன். சிலந்தி மனிதனின் சாகசங்களைப் புதுப்புது அப்டேட்களுடன் வெளியிட உள்ளது சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட். ஸ்பைடர் மேனின் கதாபாத்திரத்துக்கு கிராபிக்ஸ் சிறிதளவும் குறைவாக இருக்கக் கூடாது எனப் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ஸ்பைடர்மேன் வீடியோ கேம் பிளே ஸ்டேஷன் 4-ல் இன்னும் பல புதிய அம்சங்களுடன், இந்த மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது.

டெக் பிட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூளைக்கு வேலை!

சிறுவர்களின் கவனம், ஆங்கிலப் பேச்சாற்றல், ஞாபக சக்தி, கணிதத் திறன் என அனைத்துக்கும் தீனி போட ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது எலிவேட் ஆப். 35-க்கும் மேற்பட்ட கேம்களுடன் சிறுவர்களின் திறமையை மேம்படச் செய்கிறது. வாரம் ஒருமுறை ‘வீக்லி ரிசல்ட்’ அளித்து அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைச் சுட்டிக் காட்டுகிறது. சிறந்த மூளைப் பயிற்சி விளையாட்டுகளில் தவிர்க்க முடியாதது எலிவேட். பொழுதுபோக்கும் நேரத்தை உபயோகமாகக் கழித்திட எலிவேட்டை டவுன்லோடு செய்யலாம்.

டெக் பிட்ஸ்

காம்பிட்!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 14-வது எக்ஸ் மென் ஆகக் களம் இறங்கப்போவது காம்பிட் என்ற பெயர் கொண்ட சூப்பர் ஹீரோ. காம்பிட்டின் சூப்பர் பவரே உயிரற்ற பொருள்களை வெடிக்கும் தன்மை கொண்ட பொருளாக மாற்றி அதையே ஆயுதமாக உபயோகிப்பதுதான். எக்ஸ் மேன் காமிக்ஸில்  ஏற்கெனவே அறிமுகமான கதாபாத்திரம் பல தடைகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது திரையில் தோன்றவிருக்கிறது. லாரன் ஷுலர் டோனர் தயாரிக்கும் இப்படம் மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா?

டெக் பிட்ஸ்

வழிப்போக்கன்!

‘பெய்லே’ என்ற விவசாயி பலத்த காயங்களுடன் ஒருவரை சாலையில் பார்க்கிறார். சுயநினைவிழந்த அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது வெப்பமானியின் பாதரசம் உறைய அதிர்ச்சியடைகிறது பெய்லே குடும்பம். காலநிலையை மாற்றும் அதிசய சக்தி உள்ள அவர் பெய்லே உடன் சேர்ந்து விவசாயம் செய்கிறார். பெய்லே நிலம் மட்டும் இலையுதிர் காலத்திலும் பசுமையாக இருக்க,  வசந்த காலம் வருகையில் அவர் திடீரென காணாமல் போவதே கதை. 1986ல் வெளியாகி குழந்தைகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கதையை கிறிஸ் வேன் அல்ஸ்பர்க் எழுதியுள்ளார்.

- ச.முத்துகிருஷ்ணன்

டெக் பிட்ஸ்

தெரியுமா?

* செல்போன் தயாரிப்பில் புகழ்பெற்ற ‘நோக்கியா’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஃபின்லாந்தில் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism