Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

ஜெ.ரவி

தமிழ்நாடு

ஜெ.ரவி

Published:Updated:
தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு
தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டது வைகை அணை

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து, 10 ஆண்டுகளுக்குப் பின் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாலும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2008-க்குப் பின் அணை திறக்கப் படவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது.

தமிழ்நாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதநேயத்துடன் உதவிய சிறுமிக்குக் குவியும் பாராட்டு

 கேரளாவில் சமீபத்திய வெள்ளத்தால் நீரில் மூழ்கிய வீடுகள், உதவிக்கரம் கோரி கதறி அழும் மக்கள் எனச் செய்திகளில் வந்த காட்சிகள் விழுப்புரத்தைச் சேர்ந்த சிவசண்முகத்தின் மகள் அனுப்பிரியாவை வெகுவாகப் பாதித்தது. உடனடியாக வீட்டின் அறைக்குள் சென்றவர், தான் சைக்கிள் வாங்குவதற்காகக் கடந்த 4 ஆண்டுகளாகப் பணம் சேர்த்து வந்த உண்டியல்களை எடுத்துவந்த அனுப்பிரியா, அதில் சேர்ந்திருந்த ரூபாய் 9 ஆயிரத்தை மனமுவந்து, கேரளா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினர் அனுப்பிரியாவின் இந்தச் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தனர். சைக்கிள் வாங்க வைத்த தொகையை கேரளாவுக்கு உதவிய சிறுமி அனுப்பிரியாவுக்கு, ஹீரோ சைக்கிள் நிறுவனம் சைக்கிள் ஒன்றை வழங்கியுள்ளது. “உங்களது உள்ளம் உன்னதமாக உள்ளது” எனச் சிறுமி அனுப்பிரியாவை வாழ்த்தியுள்ளார் ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின்  தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பன்கஜ் முன்ஜல்.

தமிழ்நாடு

ஸ்கிசாட்-சாதனை

சுட்டி ஸ்டார் ஆன ரிபாத் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் ரொம்பவே பிஸி. கலாம் சாட் என்ற சாதனையைத் தொடர்ந்து இவரது டீம் செய்திருக்கும் அடுத்த ஆச்சர்யம் SKISAT. மறுபயன்பாட்டுக்கு உள்ளாகக்கூடிய வகையிலான ராக்கெட் ஆன இது அதிக பேலோடு(Payload) சுமந்துகொண்டு விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது. 10 கன செ.மீ அளவிலான SKISAT புதிய உலக சாதனையை இதன் மூலம் படைத்திருக்கிறது. வாழ்த்துகள் டீம்

தமிழ்நாடு

காவிரியில் பெருக்கெடுத்த நீர்...  முக்கொம்பில் உடைந்த மதகுகள்

கர்நாடகாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது.பவானிசாகர் அணை, அமராவதி அணை, மாயனூர் தடுப்பணை வழியாகவும் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக முக்கொம்பு  மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்குத் தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் வலுவிழந்தன. 22ம் தேதி இரவு அடுத்தடுத்து 9 மதகுகள் உடைந்தன. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதேபோல் கொள்ளிடத்தில் உள்ள நீரேற்று நிலைய பாலத்தின் தூணும் ஆற்றுக்குள் இறங்கியது. “180 ஆண்டுகளுக்கு மேலாகக் கொள்ளிடம் பாலம் உள்ளதால் பலவீனம் அடைந்திருக்கலாம். வேறு காரணங்கள் இல்லை,” என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

தெரியுமா?

* பழம்பெரும் பாடகி பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism