Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

இந்தியா

இந்தியா

இந்தியா

Published:Updated:
இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா
இந்தியா

கற்றதை செயலில் காட்டிய ஜென்!

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் அவ்வப்போது தீயணைப்பு விழிப்பு உணர்வு முகாம்கள் நடைபெறும். திடீரென்று நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டால் என்ன செய்யவேண்டும், எப்படித் தப்பவேண்டும் என்று விளக்கிச்சொல்வார்கள். கேட்கும் எல்லாரும் சலிப்போடு தலையாட்டிவிட்டு வீட்டுக்குப்போவார்கள்.

இப்படிச் சொல்லித்தரப்படும் விஷயங்களை அக்கறையோடு கற்றுக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜென்.  அதுவும் பத்து வயது மாணவி.

இவர் மும்பையில் பல உயிர்களை விபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். 6-ம் வகுப்பில் படிக்கிற இவருடைய வீட்டில் சமீபத்தில் திடீரென்று தீ பிடித்துவிட்டது. என்ன செய்வதென்று புரியாமல் எல்லாரும் பதறினார்கள்.

ஆனால், ஜென் மட்டும் நிதானமாக எல்லாரையும் வழிநடத்தி... யாருக்கும் ஆபத்தில்லாமல் வெளியேற்றியிருக்கிறார், தீயணைப்புத் துறையினரை வரவழைத்து நெருப்பை அணைத்திருக்கிறார். ‘இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்?’ என்று பிறர் வியப்போடு கேட்க, ‘எல்லாம் பள்ளிக்கூடத்துல கத்துக்கிட்டதுதான்’ என்று பெருமையோடு சொல்லியிருக்கிறார்.

இதுபோன்ற நெருக்கடிநேரச் செயல்பாடுகளை எல்லாரும் கற்றுக்கொள்வது நல்லது. என்றேனும் அது நம் உயிரைக் காக்கும்!       

இந்தியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி எங்கும் மின்சார வண்டிகள்!

புதிதாக வண்டி வாங்கப்போவதாக யாரேனும் சொன்னால், மற்றவர்கள் உடனடியாகக் கேட்கிற கேள்வி, ‘எந்த வண்டி பெட்ரோலா டீசலா?’

இந்த இரண்டையும்தவிர, மின்சார வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பிருக்காது, எண்ணெய் எரிபொருள்களை நம்பியிருக்கவேண்டிய அவசியமில்லை, செலவும் குறைவு, ஆனாலும் மக்கள் இந்தவகை வாகனங்களை அதிகம் வாங்குவதில்லை.

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஊக்கத்தொகைத் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது. இதன்படி, மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்கினால் ரூ1800ல் தொடங்கி ஊக்கத்தொகை கிடைக்கும். இதேபோல் மூன்றுசக்கர, நான்குசக்கர வாகனங்களுக்கும் ஊக்கத்தொகை உண்டு.

இந்தத் திட்டத்தின்மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கணிசமான அளவு கட்டுப்படுத்த இயலுமென அரசாங்கம் நம்புகிறது. புகையில்லாச் சாலைகள் பரவட்டும்!

இந்தியா

சாலையோரப் பூங்காக்கள்!

மும்பையில் 12 ஏக்கர் பரப்பளவுக்குப் புதிய பூங்காக்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

நல்ல விஷயம்தான். ஆனால், எங்கு பார்த்தாலும் கட்டடங்களும் சாலைகளும் நீண்டிருக்கிற அந்நகரத்தில் 12 ஏக்கர் காலி நிலத்தை எங்கிருந்து பிடித்தார்கள்?

மும்பை மக்களுக்குப் பசுமையை மீட்டுத்தருவதற்காக ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அந்நகரின் அதிகாரிகள். அங்குள்ள பெரிய பாலங்கள்/ஃப்ளை ஓவர்களின் அடியிலுள்ள பகுதியைப் பூங்காக்களாக மாற்றத்தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே மாதுங்காவில் இப்படி உருவாக்கப்பட்ட பூங்காவுக்குப் பிரமாதமான வரவேற்பு கிடைத்ததால், இன்னும் 29 புதிய பூங்காக்களை அமைக்கவிருக்கிறார்கள். இவற்றில் நடக்கும் பாதை, உட்காரும் இருக்கைகள், அலங்கார விளக்குகள், பூச்செடிகள், உடற்பயிற்சிக் கருவிகள் என அனைத்து வசதிகளும் இருக்குமாம்!

மற்ற நகரங்களும் மும்பையைப் பின்பற்றிப் புதிய சாலையோரப் பூங்காக்களை உருவாக்கலாமே!

இந்தியா

இசைச் சந்தைகள்!

வகுப்பில் மாணவர்கள் ரொம்பச் சத்தம் போட்டால், ‘இதென்ன சந்தக்கடையா?’ என்று ஆசிரியர்கள் கோபப்படுவார்கள்.

இனிமேல் கொல்கத்தாவில் எந்த ஆசிரியரும் அப்படிக் கேட்கமுடியாது. ஏனெனில், அங்குள்ள சந்தைக் கடைகளிலெல்லாம் இனிமையான சங்கீதம் ஒலிக்கப்போகிறது.

கொல்கத்தாவிலுள்ள பல சந்தைகள் மிகப் பழைமையானவை. அவற்றைப் புதுப்பிக்கும்போது ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாம் என்று யோசித்த, மாநகராட்சி அதிகாரிகள்...வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர்  என, எல்லாரும் கேட்டு மகிழும்படி இனிமையான பாடல்களை ஒலிபரப்பு  செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

‘இசைக்கு மனத்தை இதமாக்கும் வலிமை உண்டு, அழுத்தத்தோடு வருகிறவர்களையும் அது மகிழ்வாக்கிவிடும்’ என்கிறார் கொல்கத்தா நகர்மன்ற உறுப்பினர் தாரக் சிங். ‘ரபீந்திர சங்கீத் எனப்படும் வங்காளத்தின் சிறப்பு இசையில் தொடங்கி நவீனப் பாடல்கள்வரை எல்லாவற்றையும் இங்கு மக்கள் கேட்டு மகிழலாம்!’

- என். சொக்கன்

இந்தியா

தெரியுமா?

* ‘பாய்’ க்குப் புகழ்பெற்ற ஊர் பத்தமடை. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism