Published:Updated:

இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்

இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்
பிரீமியம் ஸ்டோரி
இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்

திறமை

இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்

திறமை

Published:Updated:
இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்
பிரீமியம் ஸ்டோரி
இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்
இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்

வீட்டின் கதவைத் திறந்ததும் அதிரடியும் அழகும் சேர டிரம்ஸை வாசித்து வரவேற்கிறார், சரண். “அக்கா, இது சாம்பிள்தான். இன்னும் நிறைய டியூன் கேட்கப்போறீங்க” எனச் சிரிக்கிறார்.

11 வயதாகும் சரண், டிரம்ஸ் திறமையைத் தன்னுடைய பிசினஸாக மாற்றியிருக்கும் இளம் தொழிலதிபர். படிப்பு மற்றும் பிசினஸ் என டபுள் சக்சஸ் பற்றி உற்சாகத்துடன் பகிர்கிறார்.

“என் அம்மா புவனா, அப்பா சக்தி ரெண்டு பேரும்தாம் எனக்கு திக் ஃப்ரெண்ட்ஸ். ‘நீ இப்படித்தான் இருக்கணும், இதுதான் பண்ணணும்’ என ஒருநாளும் கட்டாயப்படுத்தினதில்லே. நானும் பிடிச்சதை முழுச் சுதந்திரத்தோடு பண்றேன். அதனால், படிப்பிலும் பிசினஸிலும் சக்சஸ் பண்ணமுடியுது’’ என அம்மாவின் மடியில் அன்புடன் சாய்கிறார்.

இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரணை முத்தமிட்டுப் பேச ஆரம்பிக்கிறார் அம்மா புவனா. “சரண் சின்ன வயசிலேயே சாப்பிடும் தட்டின் பின்னால் ஸ்பூனால் தட்டி இசையெழுப்பி விளையாடுவான். அதைப் பார்த்து, உடுக்கை, சின்ன டிரம்ஸ் என வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தோம். அவனது பொம்மைகளாக வீடு முழுக்க இசை சம்பந்தப்பட்ட பொருள்களே இருக்கும். ஐந்து வயசில் அவனை டிரம்ஸ் வகுப்பில் சேர்த்துவிட்டோம். அப்புறம், பறை, உடுக்கை, டிம்வே, கஃகூன் என நிறைய வாசிக்க கத்துக்கிட்டான். பலரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கலாமேன்னு சொல்வாங்க. ஆனால், ‘போட்டி, பரிசு என ஓட வேணாம்’னு சரணின் அப்பா சொல்வார். அப்பா பிசினஸ் பற்றி அடிக்கடி வீட்டில் பேசுவதைக் கேட்டு, தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை சரணுக்கு வந்துவிட்டது. அவன் விளையாட்டா கேட்க, சென்ற வருடம் ஒரு ஐ.டி கம்பெனிக்கு அனுப்பி, பஸினஸ் அனுபவத்தைக் கொடுத்தார். அங்கே போயிட்டு வந்ததும், ‘நான் ஒரு கம்பெனி ஆரம்பிக்கவா?’னு கேட்டான்” என்கிறார்.

இசைக்கு ஓர் CEO... டிரம்ஸ் சர்கிள் சரண்“டிரம்ஸ் வாசிக்கிறது இசையின் மகிழ்ச்சியை மட்டுமல்ல, உடம்பின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பிசினஸ்மேன் ஆகணும்னு நான் உறுதியா இருந்ததால், பிசினஸ் சம்பந்தப்பட்ட சில கோர்ஸ் படிச்சேன். ‘டிரம்ஸ் சர்க்கிள்’ என்ற கம்பெனியை ஆரம்பிச்சேன். அப்பா இன்வெஸ்ட் பண்ணியதால் அவர்தான் இந்த கம்பெனியின் பார்ட்னர். நான் சி.இ.ஓ. என்னுடைய கம்பெனி மூலமாக நிறைய டிரெம்ஸ் ஈவென்ட்களை ஐ.டி கம்பெனிகளில் நடத்தறேன். அதிலும் ஒரு புதுமை இருக்கு. பொதுவாக, டிரம்ஸ் ஈவென்ட்களில் டிரம்ஸ் வாசிக்கத் தெரிந்த ஒருவர் மட்டும் வாசிப்பார். அது பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் எல்லோரும் கேட்டுட்டு இருக்கணும். நான் கொஞ்சம் யுனிக். என்கிட்ட இருக்கும் 100 டிரெம்ஸ்களையும் எடுத்துட்டுப் போயிடுவேன். அங்கே எல்லோரிடமும் கொடுத்து ஒருங்கிணைப்பேன். அவங்களையும் வாசிக்கவைப்பேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இதுவரை 170 ஈவென்ட்கள் நடத்தி, கொஞ்சம் பணம் சம்பாதிச்சுட்டேன். அது எல்லாம் என் படிப்புக்கும் சோஷியல் வொர்க்குக்கும் பயன்படுத்துவேன். எந்த ஈவென்டாக இருந்தாலும், படிப்பிலும் கவனமா இருப்பேன்” எனக் கம்பீரமாகப் புன்னகைக்கிறார் சரண்.

- சு.சூர்யா கோமதி

படங்கள்: ப.பிரியங்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism