Published:Updated:

கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!

கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!
பிரீமியம் ஸ்டோரி
கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!

கலை

கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!

கலை

Published:Updated:
கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!
பிரீமியம் ஸ்டோரி
கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!

“டோரா போட்டால்தான் சாப்பிடுவேன்”

“சின்சான் பார்த்தால்தான் தூங்குவேன்..!”

இப்படி ஆல் டைம் கார்ட்டூன் உலகிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் சுட்டீஸைப் பார்த்திருப்போம். ஆனால், அந்த கார்ட்டூன்களில் வரும் ஹீரோக்களையே சூப்பராக வரைந்து, காமிக்ஸில் கலக்கிட்டிருக்காங்க மதுரையைச் சேர்ந்த லீலா மதுரித்தா. ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு கார்ட்டூன் கேரக்டர்களை வரைஞ்சு கொடுத்திருக்காங்க.

‘`என் அப்பா சரவணன், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அம்மா ராதிகா, ஸ்கூல் டீச்சர். எனக்கு சின்ன வயசிலிருந்தே ஓவியம் வரைவதில் ரொம்ப ஆர்வம். ஓவியப் போட்டிகள், ஸ்டோரி டெல்லிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங்ஸில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்’’ என்கிற லீலா, இடதுகைப் பழக்கம் உள்ளவர்.

கதைகளுக்கு ஓவியம் வரையும் லீலா!

லீலாவின் அறை முழுக்க காமிக்ஸ் புக்ஸ், ஸ்கெட்ச் பென், வரைந்த தாள்கள் நிறைந்திருந்தன. ‘`நான் எய்த் படிக்கிறேன். ஓவியம் வரையறதும் புக்ஸ் படிக்கிறதும்தான் என் ஹாபி. அதிலும், காமிக்ஸ்தான் என் ஃபேவரைட். தேடித் தேடி படிப்பேன். ஒருமுறை அப்பா எழுதிட்டிருந்த ஸ்டோரிக்கு கார்ட்டூன் வரைய ஆர்டிஸ்ட் இல்லாமல், புக் ரெடியாகறதில் லேட் ஆச்சு. அன்னைக்கு சும்மா ஹெல்ப் பண்ணலாமேன்னு, ‘நான் வரைஞ்சு காட்டட்டுமா அப்பா?’னு கேட்டேன். அப்பாவும் அம்மாவும் சரின்னாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் நீங்க பார்க்கும் இந்த ஆர்டிஸ்ட் லீலா. ‘மிளகாய் பட்டணம்’, ‘ஸ்பைடர் மேன்’ என இதுவரை ஆறு புத்தகங்களுக்கு வரைஞ்சிருக்கேன்’’ என சிம்பிளாகச் சிரிக்கிறார் லீலா.

“வரையறதுக்கு சவாலா இருக்கும் கேரக்டர் வரும்போது என்ன செய்வீங்க?”

‘`கூகுள் பண்ணிப் பார்ப்பேன். என்கிட்ட கொடுக்கும் கதையையும் இதுக்கு முன்னாடி வந்துள்ள கார்ட்டூன்களையும் கவனிப்பேன். என் ஐடியாவையும் சேர்த்து புது கார்ட்டூன் கேரக்டர்களை உருவாக்குவேன்.’’

“உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு? அவங்களிடம் நீங்க சொல்ல நினைக்கும் கதை என்ன?”

‘`எனக்கு விஜய் அங்கிளை ரொம்பப் பிடிக்கும். என் ஸ்கிரிப்ட்ல எனக்குப் பிடிச்சது, ‘ஸ்டார் ஸ்டோரி.’ அதன் க்ளைமாக்ஸில் ‘யாருமே சாதாரணமானவங்க இல்லை. அவங்கவங்க லைஃப்ல அவங்கதான் ஹீரோ’னு வரும். அந்தக் கதையை அவரிடம் சொல்லணும்னு ஆசை.’’

‘`லீலாவுக்குக் கிடைச்ச பாராட்டுகள்...’’


‘`நான் வரைஞ்ச ஸ்டோரி புக்ஸ்ஸைப் பார்த்துட்டு, எங்க தமிழ் டீச்சர் வகுப்பில் எல்லோர் முன்னாடியும் வாழ்த்தினாங்க. எங்க ஹெட்மாஸ்டர் நிறைய ஊக்கப்படுத்தினார். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் புக்ஸ் வாங்கிப் படிச்சுட்டு, என் கிரியேட்டிவிட்டி நல்லா இருக்கிறதா பாராட்டினாங்க.’’

லீலாவுக்கு சத்யா என்கிற ஒரு தம்பி இருக்கிறார். “நானும் டிராயிங் பண்ணிருக்கேன் பாருங்க” என்கிற அவர், சிலம்பாட்டம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளிலும் பின்னி பெடலெடுக்கிறார்.

‘`குழந்தைகளின் உலகமே வேற லெவல். ஒரு கதைக்கு வரையறதுக்கு முன்னாடி, அவளும் நானும் நிறைய டிஸ்கஸ் பண்ணுவோம்.” என்கிறார் அப்பா சரவணன்.

“உங்களின் ரொம்ப நாள் ஆசை என்ன லீலா?” எனக் கேட்டதும் அவர் சொன்ன பதில், ‘அம்மாடியோவ்’ ரகம்.

‘`அது நிறைய இருக்கு. மெயின் எய்ம், ‘காஞ்சூரிங்’ டைரக்டர் ஜேம்ஸ் வானிடம், என் பேய்க் கதை ஸ்கிரிப்ட்டை காண்பிச்சு அஸிஸ்டன்டா சேந்துக்கணும்!

சூப்பர்... ஒரு செம த்ரில்லர் படம் பார்க்க இப்பவே நாம ரெடியாகிப்போம்!

- பவித்ரா பூ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம்: வீ.சதிஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism