Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாடு

ஜெ.ரவி

தமிழ்நாடு

மீண்டும், மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை!

கா
விரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. தென்மேற்குப் பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை, ஜூலை 23-ம் தேதி முழுகொள்ளளவான 120 அடியை எட்டி, நடப்பாண்டில் முதல் முறையாக நிரம்பியது. இதன் பிறகு மீண்டும் மழை பெய்ததால், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி 2-வது முறையாகவும் ஆகஸ்ட் 21-ம் தேதி 3-வது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து நீர்த் திறப்பு அதிகரித்ததால், ஆகஸ்ட் 31-ம் தேதி 4-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

தமிழ்நாடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அக்டோபர் தனித்தேர்வுமுறை ரத்து!

மிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தனித்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. ``மாணவர்கள் வசதிக்காகத் தேர்வுகளில் சில மாற்றங்களைச் செய்யவிருக்கிறோம். அதன்படி, வீட்டில் இருந்தபடியே பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக 8, 10, +1, +2 தேர்வுகளை எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வும், ஜூன், ஜூலையில் உடனடி தேர்வுகளும் மட்டுமே நடக்கும்” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

பார்வையாளர்களைக் கவர்ந்த யானை!

த்தியமங்கலம் காட்டில் தாயினால் கைவிடப்பட்ட பெண் யானை ரோகிணி, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுக்கு முன்னர் சத்தியமங்கலம் வனத்தில் தாய் யானையிடமிருந்து பிரிந்து தவித்து வந்த பெண் யானையை மீட்ட வனத்துறையினர், அந்த யானைக்கு `ரோகிணி’ எனப் பெயரிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் வைத்துப் பராமரித்துவந்தனர். இந்நிலையில், சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் காப்பகத்தில் இருந்த `அசோக்’ என்கிற யானையைச் சிகிச்சைக்காக யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டதையடுத்து, அதற்கு மாற்றாக வண்டலூர் உயிரியல் காப்பகத்துக்கு ரோகிணி யானை அழைத்து வரப்பட்டது. மனிதர்களிடம் எளிமையாக நெருங்கிப் பழகும் தன்மைகொண்ட யானை என்றும் அறிவுக்கூர்மை உடைய யானை என்றும் பாராட்டப்படும் ரோகிணியை, பார்வையாளர்கள் பார்வையிடவும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு

சென்னைக்கு வந்த மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்!

137
ஆண்டுகால சேவையில் மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது, சென்னைத் துறைமுகம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பலைக் கையாண்டுள்ளது சென்னைத் துறைமுகம். செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் வந்தது. சென்னைத் துறைமுகத்தில்  இதுவரை கையாளப்பட்ட டேங்கர் கப்பல்களில் `எம்.டி நியூ டைமண்டு’ என்கிற இந்தக் கப்பல் மிகப்பெரியது. 333 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலின் கொள்ளளவு 2.99 லட்சம் டன். 1.37 லட்சம் டன் கொள்ளளவுகொண்ட கச்சா எண்ணெய்யுடன் இந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கப்பல் என்பதால், அமைச்சர் மற்றும் துறைமுக அதிகாரிகள் கப்பலை வரவேற்றனர்.

தமிழ்நாடு

தெரியுமா?

*தமிழ்நாட்டின் முதல் பெண் கவர்னர் பாத்திமா பீவி.