Published:Updated:

சுட்டி மெயில்

சுட்டி மெயில்
News
சுட்டி மெயில்

சுட்டி மெயில்

ந்த இதழில் வெளியான ‘இந்த நாள்’ பகுதியில் செப்டம்பர் மாதம் பிறந்த, மறைந்த தலைவர்கள் மற்றும் தேசிய வீரர்களைப் பற்றிச் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கும் ஆசிரியர் சூர்யகுமார் அவர்களுக்கு நன்றி!

 - வெ.செந்தில்குமார், வேலூர்-1

சையில் சம்பாதிக்கும் சரண், ஓவியத்தில் அசத்தும் லீலா, சதுரங்கத்தில் கலக்கும் அஜய் என சாதனைச் சுட்டிகளைப் படித்து என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டேன்.

- கு.இந்துமதி, அரும்பூர்.

சுட்டி மெயில்

சுட்டி விகடனில் வெளியாகும் நொர்ணி நரிஜி, மூன்று கில்லாடிகள், போட்டோ காமிக்ஸ், வேதாளம் புதிது போன்ற படக்கதைகள் படிக்க சுவாரஸ்யமாகவும் பார்ப்பதற்கு படங்களும் அருமையாக இருக்கின்றன.

-ச.மதன், கூடலூர்.

சிரியர் தினத்தைச் சிறப்பிக்கும் விதத்தில் வெளியான சுட்டி டூடுல்கள் மிகவும் சிறப்பாக இருந்தன.

- செ.ராகமித்ரா, சென்னை-11

ங்களுக்கு எப்போதும் வியப்பளிக்கும் பறக்கும் தட்டை க்ரியேஷனாகக் கொடுத்து எங்களின் கற்பனைத் திறனுக்கு சரியான சவால் விடுத்துவிட்டீர்கள். ஜாலியாகச் செய்தோம்.

- வெ.ராம்குமார், வேலூர்.

பூகம்பக் கடவுள் பற்றிய நாடோடிக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தத் தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதையுமே பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

- மா.அறிவழகன், கமலாபுரம், ஓமலூர்

சிலந்தியுடன் ஆட்டம்(ஒரு கேம்), மூளைக்கு வேலை(ஒரு ஆப்), காம்பிட்(ஒரு படம்), வழிப்போக்கன்(ஒரு புக்) என டெக் பிட்ஸில் இடம்பெற்ற எல்லாத் தகவலுமே ரொம்பவும் சிறப்பாக இருந்தது.

-ஆர்.எஸ்.ராகேஷ், கோவை-17.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுட்டி மெயிலில் இடம்பெற்ற சுட்டிகள் அனைவருக்கும்  டாக்டர் சவுண்டப்பன் எழுதிய ‘மூளை A to Z’ என்ற புத்தகம் பரிசு.

சுட்டி மெயில்

சுட்டி மெயில் பகுதிக்கு எழுதும் கடிதத்தில், முகவரியோடு தங்களின் செல்போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும்.

சுட்டி மெயில்

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண், மின் அஞ்சல் முகவரியைக் குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

சுட்டி மெயில்

தெரியுமா?

* சாணத்திலிருந்து கிடைக்கும் எரிவாயு மீத்தேன்.