Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு

ஜெ.ரவி

தமிழ்நாடு

ஜெ.ரவி

Published:Updated:
தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!

டந்த செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பல ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்தச் சிலைகள் 3,5 நாள்கள் வழிபாட்டுக்குப் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டிருந்தன.

தமிழ்நாடு

திருமண பரிசாக பெட்ரோல், காஸ் சிலிண்டர்!

திருமணத்துக்கு மொய்யாகப் பணத்தைக் கொடுப்பார்கள்; பரிசு பொருள்களைக் கொடுப்பார்கள். ஆனால், அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் காஸ் விலை உயர்வையடுத்து தமிழகத்தின் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர்களை திருமண மொய்யாகக் கொடுத்து விலை உயர்வுக்கு நூதன எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். கடலூர், காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த திருமண நிகழ்வொன்றில் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை திருமணப் பரிசாக கொடுத்து நண்பர்கள் வாழ்த்தினர்.

இதேபோல் கடலூரில் நடந்த மற்றொரு திருமணத்திலும் 5 லிட்டர் பெட்ரோலை பரிசாகக் கொடுத்து நண்பர்கள் வாழ்த்தினர். விருத்தாசலத்தில் நடந்த மற்றொரு திருமண விழாவில், மணமக்களுக்கு 14 கிலோ கொண்ட காஸ் சிலிண்டரை நண்பர்கள்  பரிசாக வழங்கினர்.

தமிழ்நாடு

கோவையில் மீண்டும் வருகிறது வாடகை சைக்கிள் திட்டம்!

கோவை நகரில், சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்தத் தொடங்கப்பட்ட சைக்கிள் திட்டம் தோல்வியடைந்த நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வாடகை சைக்கிள் திட்டத்தை கோவை மாநகராட்சி செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.  பெங்களூரைச் சேர்ந்த ‘மெட்ரோ பைக்கர்ஸ்’ என்ற நிறுவனம், இந்தத் திட்டத்தைச்  செயல்படுத்த உள்ளது. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தில் முதல்கட்டமாக 500 சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும் என்றும், வரவேற்பைப் பொறுத்து சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் போது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.  இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் குறையும் என்கின்றனர் மாநகராட்சி நிர்வாகத்தினர்.

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 80-வது முறையாக விபத்து!

சென்னை விமான நிலையத்தில் 80 - வது முறையாகக் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், 35 அடி உயரத்தில் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த ஐந்தரை அடி அகலமும், நீளமும் கொண்ட கண்ணாடி திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது. 80 -வது  முறையாக நடந்த இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் விபத்துகள் நடந்து வருகின்றன. 80-வது முறையாக விபத்து நடந்த இடத்தில் பயணிகளோ, விமான நிலைய ஊழியர்களோ யாருமில்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து வரும் சம்பவங்களால் விமானப் பயணிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு

தெரியுமா?

*மலையும் மலை சார்ந்த நிலமும் ‘குறிஞ்சி’ என்று குறிப்பிடப்படுகிறது.