மிரளவைத்த ஹாங்காங் அணி!

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி முதல் போட்டியை ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்திருந்தது., இரண்டாவதாகக் களமிறங்கிய ஹாங்காங் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து, முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து இந்திய ரசிகர்களைப் பீதியில் ஆழ்த்தினர். அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு வழியாக 26 ரன்களில் போட்டியை வென்றது இந்திய அணி.

டவர் ஆஃப் வாய்ஸஸ்!

செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுரக் கட்டடம் தாக்கப்பட்டது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11 ஆம் தேதியை தேசபக்தி நாளாக அனுசரிக்கிறது அமெரிக்கா. இந்த ஆண்டு, தாக்குதலுக்காகக் கடத்தப்பட்ட ஃப்ளைட் 93 என்ற விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த 40 பயணிகளின் நினைவாக, 93 அடிகள் மற்றும் 40 மணிகள் கொண்ட டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காற்று அடிக்கும்போது அந்த மணிகளிலிருந்த எழுப்பப்படும் ஓசை, மக்களுக்கு மனவலிமையைக் கொடுக்கும் என்று நம்புகிறது அமெரிக்க அரசு. இந்த டவருக்கு ‘Tower Of Voices’ என்று பெயரிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசின் சிக்கன நடவடிக்கை!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை மீட்டெடுக்க, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக பிரதமர்கள் பயன்பாட்டிற்காக உள்ள விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில் விற்பனை செய்தது பாகிஸ்தான் அரசு. 4,000சிசி திறன் கொண்ட புல்லட் ப்ரூஃப் வாகனங்கள், லேண்ட் குரூசர், மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, டொயோட்டா, லெக்ஸஸ் ரக கார்கள் உள்ளிட்ட 70 சொகுசு கார்கள் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஏலம் விடப்பட்டன.

13,000 அடி உயரத்திலிருந்து பிறந்தநாள் வாழ்த்து!

வாரணாசியில், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி, 5000 குழந்தைகளுடன் தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள சிகாக்கோ நகரைச் சேர்ந்த இந்தியப் பெண் ஷீதல் மஹாஜன் என்பவர், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி’ என்ற பதாகையுடன், 13,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங், செய்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஜீரோ கிராவிட்டி கிங்!

உலகின் வேகமான மனிதர் என்று அழைக்கப்படுபவர், உசேன் போல்ட். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் A310 என்ற ஜீரோ கிராவிட்டி விமானத்தில் பயணம் செய்ய இவருக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. புவி ஈர்ப்புவிசை இல்லாத அந்த விமானத்தில் நடந்த ஓட்டப் பந்தயத்திலும் ஜெயித்து, ஜீரோ கிராவிட்டியிலும் நான்தான் ராஜா என நிரூபித்துள்ளார் உசேன் போல்ட்.

தெரியுமா?

*ஆஸ்கர் விருதுபெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா.