Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

இந்தியா

இந்தியா

இந்தியா

Published:Updated:
இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா
இந்தியா

இஸ்ரோவுக்கு கட்டணம் செலுத்தும் இங்கிலாந்து!

சமீபத்தில், இந்தியாவின் PSLV ஏவுகலம் விண்ணுக்குச்சென்றது, இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் அமைத்தது.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் இந்தியாவினுடையவை இல்லை; இங்கிலாந்தினுடையவை.

அதாவது, வழக்கமாக இந்திய செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டுசெல்லும் PSLV ஏவுகலம், இந்த முறை வெளிநாட்டு செயற்கைக்கோள்களைக் கொண்டுசென்றிருக்கிறது. இதற்காக அந்த இங்கிலாந்து நிறுவனம், ISRO-வுக்குப் பல கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறது.

பொதுவாக, விண்வெளி ஆராய்ச்சி என்பது போட்டிகள் நிறைந்த களம், மிகச் சிறப்பான தொழில்நுட்ப அறிவுள்ள நாடுகள்தான் அதில் ஈடுபடும். அப்படிப்பட்ட ஒரு துறையில், பிற நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நாம் முன்னேறியிருக்கிறோம்.

இந்தியா

சுத்தம் + சுகாதாரம் டூ இன் ஒன்!

‘ஜாகிங்’ என்றால் ஓடுவது; தினமும் ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடினால் உடலுக்கு நல்லது.

அதேபோல, இப்போது ‘Plogging’ என்றொரு விஷயம் வந்திருக்கிறது. அது உடலுக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது.

Picking-up Litter (குப்பைகளைச் சேகரிப்பது), Jogging என்ற இரு சொற்களின் தொகுப்புதான் ‘Plogging’. அதாவது, ஓர் ஊரில் உள்ள பலர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்றுசேர்ந்து, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வழியில் ஓடுவார்கள், அப்படி ஓடுகிற எல்லாருடைய கையிலும் ஒரு பெரிய பை இருக்கும்.  வழியில் தென்படும் குப்பைகளை எடுத்து அந்தப் பையில் போட்டுக்கொண்டே ஓடுவார்கள். இதனால் அவர்களுக்கும் நன்மை, சுற்றுச்சூழலுக்கும் நன்மை.

உலகெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள Plogging இப்போது இந்தியாவுக்கும் வந்திருக்கிறது. சமீபத்தில் பெங்களூரில் இந்தப் புதுமையான ஓட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோது பெரும் வரவேற்பைப்  பெற்றது.

உங்கள் ஊரிலும் யாராவது Plogging-க்கு ஏற்பாடுசெய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம்; சாதாரணமாக நடந்துசெல்லும்போது தென்படும் குப்பைகளைப் பொறுக்கி குப்பைத்தொட்டியில் போடுவதுகூட சேவைதான்!

இந்தியா

எல்லையைக் காக்கும் ஸ்மார்ட் வேலி!

இந்திய எல்லைப்பகுதிகள் பல நூறு கிலோமீட்டர்களுக்கு நீள்கின்றன. அவற்றின்வழியே அந்நியர்கள் யாரும் ஊடுருவாதபடி பார்த்துக்கொள்வது அவசியம். இதற்காக, ஏராளமான ராணுவ வீரர்கள் பணிபுரிகிறார்கள்.

இப்போது, தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுக்கவுள்ளது. இந்திய எல்லைப்பகுதிகளில் சோதனை அடிப்படையில் இரண்டு ‘ஸ்மார்ட் வேலி’கள் அமைக்கப் பட்டுள்ளன. வெப்பநிலை மாற்றங்களை அளவிடும் படக் கருவிகள், தரையடி உணரிகள், ஃபைபர் ஆப்டிகல் உணரிகள், ரேடார், சோலார் என்று பல நவீன தொழில்நுட்பக் ்கருவிகளின் துணையோடு இந்தப் பகுதிகள் கண்காணிக்கப்படும். அந்நியர் யாராவது ஊடுருவ முயன்றால், சட்டென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

இந்தியா

அதிக சம்பளம் கொடுக்கும் IT துறை!

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் துறைகள் எவை, தெரியுமா? Monster என்ற புகழ்பெற்ற வேலைவாய்ப்புச் சேவை நிறுவனமொன்று சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி, IT எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைதான் இந்தியர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை வழங்கியிருக்கிறது: மணிக்கு ரூ 317. ஐ.டிதுறைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது, உற்பத்தித் துறை.

- என்.சொக்கன்

இந்தியா

தெரியுமா?

இந்தியாவின் முதல் அஞ்சல் நிலையம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது.