Published:Updated:

நூலகத்தில் பள்ளி!

நூலகத்தில் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
நூலகத்தில் பள்ளி!

கற்றல்

நூலகத்தில் பள்ளி!

கற்றல்

Published:Updated:
நூலகத்தில் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
நூலகத்தில் பள்ளி!

ள்ளிகளில் நூலகம் உண்டு. ஆனால், நூலகத்துக்குள் பள்ளிக்கூடத்தைக் கொண்டுவந்து, கற்றலில் குறைபாடுடைய மாணவர்களையும், தக்க கல்விபெற இயலாதவர்களையும் முன்னேற்றும் முயற்சியின் தொடக்கமாக, நூலகத்துக்கு இரண்டு கம்ப்யூட்டர்கள், 700 புத்தகங்கள் வீதம் இரண்டு நூலகங்களுக்கு வழங்கியுள்ளார், சென்னை ‘சம்ஸ்கிரியா’ அறக்கட்டளையின் நிறுவனர் சந்தியா ஜெய்சந்திரன். இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி மாணவர்களின் கற்றல் நிலையை ஆய்வுசெய்து, அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் இன்றைய நவீன கல்வி வாய்ப்பைப் பெறும் வகையில், கடந்த செப்டம்பர் 23 அன்று  காலை திருவான்மியூர் மற்றும் கே.கே.நகரில் உள்ள அரசுப் பொது நூலகங்களில் கற்றல் வகுப்பைத் தொடங்கியுள்ளார்.

நூலகத்தில் பள்ளி!

நூலகத்தின் ஒரு பகுதியில், மாணவ மாணவிகளுக்கான கணினிகள் மற்றும் வண்ண வண்ணப் புத்தகங்கள் நிறைந்த வகுப்பறையை ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.ஜெய்சந்திரன் திறந்துவைத்தார். அவர், பள்ளி

நூலகத்தில் பள்ளி!

மாணவர்களிடம் பேசும்போது, ‘`பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை உள்ளன. அறிவியல் சாதனங்ளைச் சார்ந்து வாழும் இன்றைய வாழ்க்கையில், மாணவர்கள் கம்ப்யூட்டர் வழி பாடங்களை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர்கள் மூலம் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த மாதிரி வடிவங்களில், வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள், உங்களுக்கு பல கதைகளையும், பாடல்களையும் சொல்லும் அவற்றைப் படித்து மகிழலாம். `உனக்குத் தெரிந்ததை விடவும் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்’ என்று உங்கள் நண்பர்களிடம், தோழிகளிடம் துணிந்து பேசலாம். நீங்கள் எல்லோரும் திறமைசாலிகள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். என் வாழ்த்துகள்’’ என்றார்.

நூலகத்தில் பள்ளி!

‘சம்ஸ்கிரியா’ அறக்கட்டளையின் நிறுவனர் சந்தியா ஜெய்சந்திரன் பேசும்போது, சம்ஸ்கிரியா அறக்கட்டளை மூலம் இதுவரை 100 அரசுப் பள்ளிகள் மற்றும் 10 அரசு நூலகங்களில் மாணவ மாணவியருக்கு செய்முறை மூலம் அறிவியல் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஐந்து அரசுப் பள்ளிகளில் கணக்கு மற்றும் ஆங்கில மொழிப்பயிற்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் 15,000 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இங்கு வரும் மாணவர்கள், கம்ப்யூட்டரில் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதை இங்குள்ள டைரியில் அவர்களின் பெயருடன் எழுத வேண்டும். கணக்கு, அறிவியல், ஆங்கிலம், வரலாறு என அவர்கள் குறிப்பிடுவதை கம்ப்யூட்டர் வீடியோவில் பார்த்து கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள, பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்றார் மகிழ்வாக.

நூலகத்தில் பள்ளி!

சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் பேசும்போது, ``2015-ல் சென்னையை வெள்ளம் பாதித்தபோது, அசோக் நகர் மற்றும் புதுத்தெரு நூலகங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அப்போது, சம்ஸ்கிரியா அறக்கட்டளை மூலமாக புதுத்தெரு நூலகத்தில் ஒரு பகுதியைப் புனரமைத்து, அதில் குழந்தகளுக்கான புத்தகங்கள், மேசை, நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கினார்கள். இதனால் குழந்தை வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அவர்களின் பெற்றோர்களும் நூலகம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார் உற்சாகமாக.

படங்கள்: வீ.நாகமணி