Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

நீல ரோஜா!

ரோஜா பூக்களில் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பார்த்திருப்பீர்கள். நீல ரோஜா பார்த்திருக்கிறீர்களா? விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அடுத்த சாதனை, இந்த நீல ரோஜா. ஜப்பானியர்களின் மூளையில் உருவான இந்த ரோஜா, முதன்முறையாக, 2011-ம் ஆண்டு அமெரிக்கா, கனடா நாடுகளில் விற்பனைக்கு வந்தது. ஒரு வகை நீலப் பூவின் மூலக்கூறுகளை ரோஜாவில் இணைத்து, இந்தப் பூவை உருவாக்கினர். இதற்கு முன்பு, வெள்ளை ரோஜாவில்தான் நீலச் சாயந்தைப் பூசுவார்கள். ஜப்பான் நாட்டின் ‘சண்டோரி லிமிடெட்’ என்ற நிறுவனம், 20 ஆண்டுகள் முயன்று செடியிலேயே உருவாக்கிய இந்த நீல ரோஜாவின் விலையும் அதிகம்தான்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுதைக்குத் தெரியுமா?

‘கழு’ என்பது ஒரு வகை கோரைப்புல். இந்தப் புல்லில் படுப்பதற்குப் பயன்படும் பாய் பின்னுவார்கள். இது, பச்சையாக இருக்கும்போது கற்பூரம் போன்ற வாசனையை உணர முடியும். இந்தப் புல்லில் பின்னப்பட்ட பாயின் அருகில் தேள், பூரான் போன்ற விஷப்பூச்சிகள் நெருங்காது. இதன் மருத்துவக் குணங்கள் உடல்நலத்தைக் காக்கும். எனவே, ‘கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை’ என்ற பழமொழி உருவானது. அதுவே, ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை’ என்றாகிவிட்டது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

எலும்புகளை வலிமையாக்கும் சப்போட்டா!

ப்போட்டா என்றதும், அதன் கொழகொழப்பும் இனிப்புச் சுவையும் நினைவுக்கு வரும். இது சுவையை மட்டுமல்ல, உடலுக்குப் பல  நன்மைகளை அளிக்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றுக்கும் தீர்வாக அமைகிறது. சப்போட்டா பழச்சாற்றுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால், சளித்தொல்லை  நீங்கும். நல்ல தூக்கத்தை அளிக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கிராம்பு கதை!

ணவில் நறுமணமும் உடலுக்குப் பல ஆரோக்கிய குணங்களையும் அளிப்பது, கிராம்பு. இதன் தாயகம், இந்தோனேசியாவின்  Maluku Islands. ‘’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்போது, இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. பல்வலி, ஜீரணக்கோளாறு, வாந்தி, ஆஸ்துமா எனப் பல பிரச்னைகளுக்கு கிராம்பு மிகச் சிறந்த மருந்தாகும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

முதல் அறுவைசிகிச்சை குழந்தை!

றுவைசிகிச்சை முறையில் குழந்தை பிறப்பதற்கு, ‘சிசேரியன்’ எனச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு வரலாற்று நிகழ்வு சொல்லப்படுகிறது. பண்டைய ரோமன் நாட்டில், பிரசவத்தில் இறந்த ஆரேலியா என்ற தாயின் வயிற்றிலிருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தார்கள். அந்தக் குழந்தையே ஜூலியஸ் சீசர். ஆகவே, முதல் அறுவை சிகிச்சை குழந்தையான சீசரின் நினைவாக, சிசேரியன் எனப் பெயரிட்டனராம்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தெரியுமா?

* தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் கேரளா.

* ‘யங் இந்தியா’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் காந்தியடிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism