உங்கள் செல்லத் தோழன் சுட்டி விகடனுக்கு இது 20-ம் ஆண்டு. இன்றைய டிஜிட்டல் வேகத்தில், ஒரு சிறுவர் பத்திரிகை 20 ஆண்டுகளைத் தொட்டுத் தொடர்வது சவாலான விஷயம். அந்தச் சவாலை சுட்டி விகடன் அழகாகக் கடந்திருப்பதற்கு முதல் காரணம், உங்களது உற்சாகமான ஆதரவுதான். ஏராளமான கார்ட்டூன் சேனல்கள், தாராளமான வீடியோ கேம்ஸ் என விர்ச்சுவல் உலகம் விரிந்திருக்கும்போதும், புத்தகம் படிக்க வேண்டும் என்ற உங்களது எண்ணமும் அந்த ரசனையின் சுவையை உணர்ந்திருப்பதும்தான். அதற்கு, வாசகர்களாகிய உங்களுக்கு எங்கள் முதல் நன்றி!

இரண்டாவது காரணம், அவ்வப்போது உலகில் நடக்கும் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்று, அவற்றை அச்சு வடிவிலும் உங்களுக்கு அளிக்கும் சுட்டி விகடனின் இளமைத் துள்ளல். பெரியவர்களைவிட, பிறந்த குழந்தைதான் எந்த ஒரு விஷயத்தையும் மிக வேகமாகக் கற்றுக்கொள்ளும். காரணம், குழந்தையின் மூளை ஒரு விஷயத்தில் முன் முடிவுகளின்றி புதியவற்றுக்கு இடம் அளிக்கும் வகையில் எப்போதும் காத்திருக்கும். அப்படி, பல்வேறு விஷயங்களை உங்கள் சுட்டி விகடன் ஏற்று வந்துள்ளது. அப்படியான புதிய விஷயங்களால் சுட்டி விகடனில் பங்களித்துவரும் படைப்பாளர்கள், அறிவியலாளர்கள், பல்துறை வல்லுநர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் ஆதரவுடன் இதே உற்சாகத்துடன் அடுத்தடுத்த இதழ்களில் மேலும் பல புதுமைகளுடன் தொடர்ந்து உங்களை மகிழ்விக்கும் சுட்டி விகடன்!

அன்புடன்
ஆசிரியர்