Published:Updated:

''குழந்தை ஆரோக்கியமா இருக்கு" : டுபாக்கூர் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டர்

''குழந்தை ஆரோக்கியமா இருக்கு" : டுபாக்கூர் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டர்
''குழந்தை ஆரோக்கியமா இருக்கு" : டுபாக்கூர் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டர்

புதுக்கோட்டை: செத்த பிணத்துக்கு வைத்தியம் பார்த்து பணம் பிடுங்குவதை ரமணா படத்தில் காட்டினார்கள். புதுக்கோட்டையில், கர்ப்பத்தில் ஊனத்துடன் இருந்த குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக ரிப்போர்ட் கொடுத்து பணம் பறித்திருக்கிறது ஒரு ஸ்கேன் சென்டர்!
 

''குழந்தை ஆரோக்கியமா இருக்கு" : டுபாக்கூர் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டர்

புதுக்கோட்டை மப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மனைவி ஐஸ்வர்யா கர்ப்பம் தரிக்க, புதுக்கோட்டையில் இருக்கும் கஜலட்சுமி என்கிற மருத்துவரிடம் காண்பித்திருக்கிறார். மருத்துவரும் வழக்கம் போல் ஸ்கேன் செய்ய சொல்லி அப்போலோ (இது வேறு அப்போலோ) ஸ்கேன் சென்டருக்கு சீட்டு எழுதி கொடுத்திருக்கிறார். ஜோஸ்வாவும் மூன்றாவது மாதத்திலிருந்து ஏழாவது மாதம் வரை மாதம் ஒரு முறை ஸ்கேன் செய்திருக்கிறார். எட்டாவது மாதம் ஸ்கேன் செய்யும் போது தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இனி அவரிடமே கேட்போம்.

##~~##
''கடந்த 15 ஆம் தேதி வழக்கம் போல ஆஸ்பத்திரிக்கு போனோம். டாக்டரும் ஸ்கேன் பண்ணச் சொல்லி எழுதி குடுத்தாங்க. அப்போலோ ஸ்கேன் சென்டர்ல ஸ்கேன் செஞ்சிட்டு, 'குழந்தைக்கு ஏதோ பிரச்னை மாதிரி இருக்கு உடனே வெளில கொண்டு போய் பாத்துக்கங்க"ன்னு சொன்னாங்க. என்ன பிரச்னைனு கேட்டதுக்கு சரியா பதில் சொல்லல. மறுநாள் திருச்சி தில்லைநகர்ல இருக்குற பாலாஜி ஸ்கேன் சென்டர்ல ஸ்கேன் எடுத்தாங்க. ஸ்கேன் செஞ்சி பார்த்துட்டு, 'குழந்தை இறக்குற தருவாயில இருக்கு. குழந்தை யோட வளர்ச்சி குறைவா இருக்கு. ஏற்கனவே இந்த குழந்தையை ஸ்கேன் பண்ணும்போதே இது தெரிஞ்சிருக்குமே. இவ்வளவு நாள் ஏன் குழந்தையை வெளில எடுக்காம இருந்தீங்க"ன்னு கேட்டாங்க. அப்படி எதுவுமே எங்க கிட்ட சொல்லலன்னு சொன்னோம். 'உடனே குழந்தையை வெளில எடுத்துருங்க இல்லைனா தாயோட உயிருக்கும் பிரச்னையாகிடும்"னு சொன்னாங்க. ஒரு வழியா அவங்க சொன்னபடி செஞ்சோம். குழந்தையை வெளில எடுத்தா குழந்தைக்கு ஒரு கையே இல்லை. எடையும் குறைவா இருந்துச்சி.
 
''குழந்தை ஆரோக்கியமா இருக்கு" : டுபாக்கூர் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டர்

எல்லாத்தையும் முடிச்சிட்டு, அவங்க கொடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கொண்டு வந்து அப்போலோவுல குடுத்து ஏன் இப்படி செஞ்சீங்கன்னு கேட்டோம். அதுக்கு ஸ்கேன்ல இருந்த டாக்டர் சேகர், 'நாங்க நல்லாத்தான் ஸ்கேன் செஞ்சோம். ஒண்ணு ரெண்டு இப்படி மிஸ்ஸாக வாய்ப்பு இருக்கு. நாங்க என்ன செய்யுறன்னு கூலா பதில் சொல்றாரு. டவுன் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுக்க போனோம். அவங்க இதெல்லாம் மெடிக்கல் கவுன்சிலில் தான் புகார் கொடுக்கணும்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. அது சம்பந்தமான அதிகாரியை அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்தோம். அவங்க சென்னை போய்ட்டாங்க இன்னொரு நாள் வாங்கன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. டாக்டர் கஜலட்சுமி கிட்ட கேட்டோம். ஸ்கேன் ரிப்போர்ட்ல என்ன எழுதி இருக்கோ அதன்படி தான் நான் மருத்துவம் பார்த்தேன்னு சொல்றாங்க. இப்படி ஆளாளுக்கும் பதில் சொல்றாங்க" என்று கண் கலங்கினார் ஐஸ்வர்யா.

வீ.மாணிக்கவாசகம்