Published:Updated:

டானிக் ஏன் இனிக்குது?

டானிக் ஏன் இனிக்குது?
பிரீமியம் ஸ்டோரி
News
டானிக் ஏன் இனிக்குது?

டானிக் ஏன் இனிக்குது?

டம்பு சரியில்லாததுக்குக் கொடுக்கிற மாத்திரைகள் கசக்குது. ஆனால், இருமலுக்கான சிரப், சத்துக்காக கொடுக்கும் டானிக் மட்டும் பெரும்பாலும் இனிக்குதே ஏன்? சொல்கிறார்,  டாக்டர் அரசர் சீராளர் (இயக்குநர்), எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை.

* ‘டானிக்’ என்பது, டானிகோஸ் (Tonikos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு, ‘புத்துணர்ச்சி’ என்று அர்த்தம். இரும்புச்சத்து, வைட்டமின், மினரல் போன்ற சத்துகளுக்காகக் கொடுத்தவை ‘டானிக்’  எனப்பட்டது. 1980-க்குப் பிறகு, தண்ணீராக இருக்கும் எல்லா மருந்துகளையுமே ‘டானிக்’ என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம்.

டானிக் ஏன் இனிக்குது?

* குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்காகவே, இனிப்புச் சுவைக்காக சுக்ரோஸ்,லேக்டோஸ், சுக்ரலோஸ் ஆகியவற்றைச் சேர்க்கிறார்கள். இவை  ‘ஸ்வீட்டனிங் ஏஜென்ட்’ எனப்படும் சுவையூட்டிகள். குழந்தைகளுக்குப் பிடித்த ஆரஞ்சு, ரோஸ் வண்ணங்களிலும் ஸ்ட்ராபெர்ரி, சாக்லெட் சுவைகளிலும் டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டானிக் ஏன் இனிக்குது?

* பல டானிக்குகள் நீர்ம வடிவத்தில் கிடைக்கும். சில டானிக் பாட்டில்களில் பொடிகள் இருக்கும். தேவைப்படும்போது நீர் சேர்த்துகொள்ளலாம்.

* ஒரு வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு, மருந்து பாட்டிலின் சிறிய மூடியில் அளவுபடி கொடுக்கலாம். ஒரு வயதுகூட ஆகாத குட்டி பாப்பாவுக்கு, சொட்டு சொட்டாகக் கொடுப்பார்கள். அதை, ‘சொட்டு மருந்து’ என்பார்கள். டாக்டரிடம் ஆலோசனை பெற்றே எந்த மருந்தையும் சாப்பிட வேண்டும்.

டானிக் ஏன் இனிக்குது?

* பெரியவர்கள் சாப்பிடும் இருமல் மருந்தும் இனிப்பாக இருக்கும் ஏன் தெரியுமா? சளி பிடித்து, இருமிக்கொண்டே இருப்பதால், தொண்டைப் பகுதி புண்ணாக இருக்கும். மாத்திரையாக விழுங்கினால் வேலை செய்யாது. அந்த இடத்தில் மருந்து படும்போதே புண்கள் குணமாகும். கசப்பான மருந்தை வேகமாக விழுங்கிவிடுவோம். இனிப்பாக இருந்தால், மெதுவாகத் தொண்டையில் இறங்கும்போது புண்கள் சீக்கிரம் குணமாகும். கை, கால்களில் காயம் பட்டால் மருந்து போடுகிறோம் இல்லையா? அதேபோலத்தான்.

* ரொம்ப வயதான பிறகு பாட்டி, தாத்தாவும் குழந்தைகளைப் போல மாறிவிடுகிறார்கள். மாத்திரைகளை விழுங்க சிரமப்படுவார்கள். அதனால், அவர்களுக்கான மருந்துகளும் இப்போ டானிக்காகக் கொடுக்கப்படுகிறது.

- ஜெனி ஃப்ரீடா