Published:Updated:

வீட்டை காலி செய்யாததால் 9 வயது சிறுமிக்கு எலெக்ட்ரிக் ஷாக் - மதுரையில் கொடூரம்

வீட்டை காலி செய்யாததால் 9 வயது சிறுமிக்கு எலெக்ட்ரிக் ஷாக் - மதுரையில் கொடூரம்
வீட்டை காலி செய்யாததால் 9 வயது சிறுமிக்கு எலெக்ட்ரிக் ஷாக் - மதுரையில் கொடூரம்

மதுரையில், வீட்டை காலி செய்யாததால், வாடகை வீட்டில் வசித்த தம்பதியின் 9 வயது குழந்தைக்கு, வீட்டு உரிமையாளரின் மகன் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்ரவதை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ்குமார்-ராஜலட்சுமி தம்பதி, மதுரை பேச்சியம்மன் படித்துறைப் பகுதியில் உள்ள மணிவண்னன் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் வசித்துவந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 9வயதுடைய ஹரிணி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த சனிக்கிழமை வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கரன்ட் ஷாக் அடித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

இந்நிலையில், கரன்ட் ஷாக் ஏற்பட்ட சிறுமி ஹரிணி உடம்பில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தால் சந்தேகமடைந்த பெற்றோர், திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்துவரும் ஹரிணி தொடர்ந்து பேசமுடியாமல் இருக்கிறார். இந்நிலையில், தற்போது ஹரிணி உடல் நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்து பேச ஆரம்பித்தார். அப்போது நடந்த மின்சார விபத்து தானாக நடந்ததில்லை; வீட்டின் உரிமையாளர் மகன் சந்தோஷ் வேண்டும் என்றே தன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி, அடித்து சித்ரவதை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஹரிணியின் தந்தை கணேஷ்குமார் கூறுகையில், " நாங்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர், 'எங்களிடம்  வீட்டை  காலி செய்யச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். வீடு கிடைக்காததால் வேறு வீடு மாற முயன்றும் முடியவில்லை. விரைவாக வீட்டை காலிசெய்யாத கோபத்தில், வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ், என் மகள் ஹரிணி மீது மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளதாகத் தெரிவித்தார்.

 இந்நிலையில், குழந்தையின்மீது மின்சாரத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் சந்தோஷை திலகர் திடல் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருதாகத் தெரிவித்தார்.