சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14
பிரீமியம் ஸ்டோரி
News
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘ராகுலின் செவ்வாய் பயணம்’ சிறுகதைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 15.12.2018

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14

இடமிருந்து வலம்

1. மிக்கி மவுஸும் டொனால்ட் டக்கும் இவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். (6)
4. மூக்கு என்பதை இப்படியும் சொல்லலாம். (2)
10. வீடு கட்டப் பயன்படும் கல். (4)
12. உப்பு விளைவிக்கப்படும் களம். (5)
20. சார்பியல் கோட்பட்டை வகுத்த 20-ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. (5)

வலமிருந்து இடம்

3. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்ற முதல் பெண் விஞ்ஞானி. (5)
11. முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் பிரதமருமான இம்ரான் கான் நாடு. (5)
14. இதுவும் மருந்தும் மூன்று நாள் என்பர். (4)
19. கல்வி ------- போன்றது. (2)
22. தென்முனையில் உள்ள குளிர்ப்பாலைவனம். (6)  

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14

மேலிருந்து கீழ்

1. மணியாச்சி என்றதும் இவர் நினைவுக்கு வருவார். (6)
2. ரூபிக்-------- என்பது ஒரு விளையாட்டுக்கருவி (3)
3. ஆடு, மாடுகளைத் தினமும் --------- நிலத்துக்குச் செல்ல வேண்டும். (5)
8. கிரிக்கெட்டில் இது போட்ட பின், யார் முதலில் விளையாடுவது எனத் தீர்மானிப்பர். (2)
9. ஆயிரக்கணக்கான -----கள் சேர்ந்ததே ஓர் ஆடை. (2)
13. மார்கழி மாதத்தில் இது அதிகம். (2)
16. விஷ்ணுவின் வாகனப் பறவை. (4)
17. அமெரிக்க மாகாணங்களில் ஒன்று. இங்கே எக்ஸிமோ மக்கள் வசிக்கிறார்கள். (4)
18. மன்னரிடம் கவிதைப் பாடி, பரிசு பெறுபவர். (4)

கீழிருந்து மேல்

5. அனைத்துப் பொருள்களும் கிடைக்கும் இடம். (4)
6. தமிழ் மாதங்களில் ஒன்று. இது முடிந்தால் வெயில் காலம்.............................. (4)
7. அமைச்சர் (4)
15. முதலாம் உலகப்..................... நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன (2)
20. கிரீன்லாந்துக்கு அருகில் இருக்கும், பெயரிலேயே ஜில்லென்று இருக்கும் நாடு.(5)
21. நடிகர்களை இப்படிச் சொல்வர். (3)
22. பாதுகாப்புக் கருதி தஞ்சம் புகுதல். (6)

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14

இந்தப்  போட்டிக்கான விடை ஜனவரி 15, 2019 இதழில் இடம்பெறும்.

- சங்கீதா

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 14