Published:Updated:

தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்!

தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்!
பிரீமியம் ஸ்டோரி

`நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம் 200’ பரிசளிப்பு விழா, டிசம்பர் 8-ம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி,  ``சுட்டி விகடனின் தருமபுரி 200 புத்தகம், அனைத்துப் போட்டி தேர்வுக்கும் ஏற்ற பல்வேறு தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. மாணவர்களுக்கு OMR ஷீட் முறையில் தேர்வு எழுதவைத்து, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுத்த சுட்டி விகடனின் பணி,  பாராட்டுதலுக்குரியது. அதற்கு எனது நன்றிகள்” என்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, “தருமபுரி மாவட்டம் குறித்து 200 தகவல்களை வழங்கி, அந்தத் தகவல்களிலிருந்தே கேள்விகள் கேட்டு, போட்டித் தேர்வுடன் சிறப்புப் பரிசு வழங்குவது, மிகவும் மகத்தான பணி. அந்தச் சாதனைக்காகவே விகடன் குழுமத்தை மனதாரப் பாராட்டுகிறேன்” என்றார்.

தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்!

தருமபுரி அரசு கலைக்கல்லூரி துணை முதல்வர் கண்ணன், “தகுதி என்பது வேறு ஒன்றுமில்லை,  ‘த’ என்பது தன்னம்பிக்கை, ‘கு’ என்பது குறிக்கோள், ‘தி’ என்பது திறமை. இந்த மூன்றும் சேர்ந்தே தகுதி. மாணவன் படிக்கும் காலத்திலேயே தனது தகுதியை உயர்த்திக்கொண்டால், வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்” என்றார்.

தருமபுரி 200 இன்ஃபோ புத்தகத்தை தொகுத்து வழங்கிய பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார், “தருமபுரி மாவட்டம், தொன்மையான வரலாற்றுச் சிறப்புகள் உடையது. சேலம் மாம்பழம் என்றுதான் நாம் அனைவரும் அறிவோம். உண்மையில், அது சேலம் மாம்பழம் கிடையாது; தருமபுரி மாம்பழம். ஒன்றுபட்ட மாவட்டமாக தருமபுரி இருந்தபோது, அந்தப் பெயர் சேலத்துக்குக் கிடைத்துவிட்டது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்!

மருத்துவர் செந்தில் பேசும்போது, “இன்றைய மாணவர்கள் வாள் ஏந்தி போருக்குச் செல்ல வேண்டியதில்லை. மாறாக, புத்தங்களை வாசித்து போட்டித் தேர்வுகளுக்குப் போக வேண்டும்” என்றார்.

`நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்’பரிசளிப்பு விழாவை ஒருங்கிணைத்தார், தருமபுரி போளையம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் எஸ்.அன்பரசு.

நிகழ்ச்சியில் பரிசுபெற்ற அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுபதர்ஷினி, “நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். சுட்டி விகடன் தர்மபுரி 200 தேர்வு எழுதியது, எனக்கு புது அனுபவமாக இருந்தது. விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி” என்றார்.

தருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்!

விவேகானந்தா பள்ளி மாணவி ஐஸ்வர்யா,  ``முதன்முறையாக OMR ஷீட்டில் தேர்வு எழுதியபோது படபடப்பாக இருந்தது. எங்கள் மாவட்டத்தை நன்றாகத் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது” என்றார்.

இந்தியன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், ``தருமபுரியைக் குறித்த பல விவரங்களைத் தொகுத்துக் கொடுத்த சுட்டி விகடனுக்கு நன்றி” என்றனர் உற்சாகமாக.

தருமபுரியின் பிரபல இதய மருத்துவர் சிவசுப்பிரமணியம், செந்தில் மெட்ரிக் பள்ளி நிர்வாகி, சக்திவேல் உட்பட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சுட்டிகளை ஊக்கப்படுத்திப் பேசினர்.

- எம்.வடிவேல், ச.சைலேஷ்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism