Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

Published:Updated:
சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சந்தைக்குப் போகலாமா?

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மால், சூப்பர் மார்க்கெட் என்றே பார்த்துப் பழகிய நகரத்துச் சுட்டிகளுக்குச் சந்தை என்றால், புரிவது கஷ்டம்தான். ஒரு பொருளை விளைவிப்பவர்களும் (அல்லது கால்நடைக்குச் சொந்தக்காரர்களும்) வாங்க விரும்புபவர்களும் நேரிடையாகச் சந்திக்கும் இடம்தான் சந்தை. பழங்காலத்தில் அதுதான் நடைமுறையாக இருந்தது. பிறகுதான் நிறுவனங்கள் உண்டாகி, பெரும் லாபம் பார்க்க ஆரம்பித்தன. அப்படியான சந்தைகளில் ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை. 18 ஏக்கர் பரப்பில் 8000 கடைகளுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறது. தக்காளி முதல் தங்கம் வரை இங்கே கிடைக்கும். 125 ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்தச் சந்தை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடமை அறிவோம்!

சூழலியல் ( Ecology) என்ற வார்த்தை, நாம் ஒவ்வொருவரும் அறிந்து, புரிந்து பின்பற்றவேண்டிய ஒன்று. உலகில் உள்ள உயிரினங்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பைச் சொல்வது சூழலியல். இந்த  Ecology என்ற வார்த்தை,  Oikas என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு வீடு, குடும்பம் என்று பொருள் உண்டு. அதாவது, உலகமே ஒரு வீடு. அதில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஒரே குடும்பம். இதைப் புரிந்துகொண்டு இயற்கைக்குக் கேடு உண்டாக்காமல் வாழ்வது நமது கடமை.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பந்து வீடுகள்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் புறநகர்ப் பகுதியில், பந்து போன்ற கோள வடிவில் 50 வீடுகள் உள்ளன. டச்சு நாட்டுக் கலைஞரும் சிற்பியுமான  Dries Kreijkamp என்பவரின் கலைவண்ணத்தில் உருவான, கோல்ப் பந்து போன்ற இந்த வீடுகளுக்கு, Bolwoningen என்று பெயர். இவை கட்டப்பட்டு 30 ஆண்டுகளாகியும் மெருகு குலையாமல், சுற்றுலாப் பயணிகளின் ஃபேவரைட் இடமாக மிளிர்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மிகப்பெரிய விதை

உலகின் மிகப்பெரிய விதைகளில் ஒன்று, கடல்பனை விதை. 20 கிலோ வரை எடை  இருக்கும். கடல் பனை வளர்ந்து 100 ஆண்டுகள் கழித்துத்தான் பூக்கும். பழம் உருவாக மேலும் 10 ஆண்டுகள் ஆகலாம். இரட்டைத் தேங்காய், திருவோட்டுக்காய் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இதன் விதையைப் பாதியாக அறுத்துத்தான், அன்றைய சாமியார்கள், யாசகம் கேட்பவர்கள் திருவோடாகப் பயன்படுத்தினர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மருந்தாகும் திராட்சை!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

திராட்சை என்றதும் இனிப்பு நினைவுக்கு வரும். இது சுவையை மட்டும் கொடுக்கும் பழம் அல்ல. குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கும் திராட்சை சிறந்த மருந்து.
தினமும் ஒரு டம்ளர் கருந்திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், ஆரம்பகட்ட புற்றுநோய் குணமாகும். நரம்புத்தளர்ச்சி. மூட்டுவலி, இதயநோய் போன்றவையும் குணமாகும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பார்பி

உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் தோழியான பார்பி பொம்மை பிறந்த வருடம், 1959. இதை வடிவமைத்தவர், ரூத் ஹேண்டலர். சொந்த மகளின் பெயரையே பொம்மைக்குச் சூட்டினார்.
ரூத்தின் மகள் பொம்மைகளுக்குப் பெரியவர்கள் பெயரைச் சூட்டி விளையாடுவதைப் பார்த்தார். அதற்கு முன்பு, குழந்தைகளுக்கான பொம்மைகளும் குழந்தை வடிவிலே இருந்தன. எனவே, ‘பிரட் லில்லி’ என்ற பொம்மையின் அடிப்படையில், ஒரு டீன் ஏஜ் பொம்மையாக பார்பியை உருவாக்கினார். அதுவே, பின்னாளில் பல்வேறு பார்பி பொம்மைகளாக கலக்கிவருகிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஊர்களும் உணவுகளும்

மதுரைக்கு ஜிகர்தண்டா, ஆம்பூருக்குப் பிரியாணி, திருநெல்வேலிக்கு அல்வா என நமது ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு உண்டு. அவற்றில், அதிகம் தெரியாத சில பெயர்களைப் பார்ப்போமா...

சுட்டி ஸ்டார் நியூஸ்!

காரைக்குடி - உப்புக்கண்டம்

விருதுநகர் - புரோட்டா

திருவண்ணாமலை - பாயசம்

பட்டுக்கோட்டை - மசாலா பால்

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - தேன்குழல்

மணப்பாறை - முறுக்கு

காரைக்கால் - குலாப் ஜாமுன்

கோவில்பட்டி - கடலைமிட்டாய்

தூத்துக்குடி - மக்ரூன்

சாத்தான்குளம் - மஸ்கோத் அல்வா

ஶ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா

திருச்செந்தூர் - பனங்கற்கண்டு

புயலும் தமிழகமும்!

சமீபத்தில், ‘கஜா’ என்ற புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய சோகம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. இயற்கையின் பலத்துக்கு முன்பு மனிதர்கள் சாதாரணம் என உணர்த்திவிட்டது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை மையம் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்தது. இதுவரை, தமிழகத்தைத் தாக்கிய புயல்களில் முக்கியமானவை.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

2005 டிசம்பர் - ஃபானூஸ்

2008 நவம்பர் - நிஷா

2010 நவம்பர் - ஜல்

2011 டிசம்பர் - தானே

2012 அக்டோபர் - நீலம்

2013 டிசம்பர் - மடி புயல்

2015 டிசம்பர் - நாடா

2016 - டிசம்பர் - வர்தா

2017 நவம்பர் - ஓகி

2018 நவம்பர் - கஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism