Published:Updated:

தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

தேடி வந்த டைனோசர்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

ஓவியம்: மிர்தியுன் ஜெய்

தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

ஓவியம்: மிர்தியுன் ஜெய்

Published:Updated:
தேடி வந்த டைனோசர்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

பிருந்தாவனம்...

மலையடிவாரத்தில் அமைந்த சிறுசிறு வீடுகள்கொண்ட அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் அனுபல்லவி என்கிற சிறுமிதான் நம் கதாநாயகி. அனுவின் நெடுநாள் ஆசை, ஒரு டைனோசரை வீட்டில் வளர்ப்பது.
தந்தை கதிரேசனிடம், ‘‘அப்பா, டைனோசர் எந்த ஊரில் இருக்கு?’’ எனக் கேட்டாள்.

‘‘டைனோசர் எப்பவோ அழிஞ்சுபோச்சு. அருங்காட்சியகத்தில் படிமங்கள்தான் இருக்கு. நாளைக்கு அங்கே போகலாம். இப்போ தூங்கு’’ என்றார் அப்பா.

தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

அனுபல்லவி தூங்கச் சென்றாள். கொஞ்ச நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் சத்தம். அப்பாவும் அம்மாவும் ஆழ்ந்து தூங்கியதால், கதவைத் திறந்தாள் அனு. மலையிலிருந்து உருண்டுவந்த பாறை ஒன்று, கதவின் மேல் மோதியிருப்பது தெரிந்தது.

அனு அந்தப் பாறையை உருட்டிவிட நினைத்தபோது, அதிலிருந்து சத்தம் கேட்டது. பயந்துபோய் ஓட நினைக்க, பாறையில் விரிசல்... அதிலிருந்து ஓர் உருவம் எட்டிப் பார்த்தது. அட, அது பாறை இல்லே; முட்டை. அதிலிருந்து வந்தது ஒரு டைனோசர் குட்டி.

தலையை நீட்டி சுற்றிலும் பார்த்த டைனோசர் குட்டி, அழத் தொடங்கியது. ‘‘உஷ்.. உஷ்... பாப்பா ஏன் அழறே?'' என்ற அனு, வேகமாக உள்ளே சென்று, தம்பி ஜீவாவின் விளையாட்டு பொருள்களுடன் வந்தாள். அதைக் கொடுத்து டைனோசரை சமாதானம் செய்தாள்.

மறுபடியும் உள்ளேபோய் பால் காய்ச்சி எடுத்துவந்து கொடுத்தாள். குடித்த டைனோசர் அழத் தொடங்கியது. சந்தேகத்துடன் அந்தப் பாலில் கொஞ்சம் குடித்துப் பார்த்தாள். ‘ஆகா... சர்க்கரைக்குப் பதில், உப்பு போட்டுட்டோமே' என நினைத்தாள்.

டைனோசர் குட்டி முறைப்பதைப் பார்த்த அனு, ‘‘சரி... சரி... அவசரத்துல தப்பாயிடுச்சு. இரு வரேன்'' என்றபடி, பழங்களை கொண்டுவந்து கொடுத்தாள். குட்டி மளமளவெனச் சாப்பிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

‘‘உனக்கு ஒரு பெயர் வைக்கணுமே... என் பெஸ்ட் ஃப்ரெண்ட் பேரு, தாரா. அதையே வைக்கிறேன்'' என்றபடி, குட்டியைப் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று, மெத்தையில் படுக்கவைத்த தூங்கிப்போனாள்.
விடியற்காலையில் அனுவும் தாராவும் மலையில் நடந்துகொண்டிருந்தார்கள். ஆம்! ‘‘உன் தாய் டைனோசரிடம் உன்னை என் வீட்டில் வளர்க்க அனுமதி வாங்கிக்கொண்டு வருவோம்'' எனச் சொல்லிய அனு, தாய் டைனோசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தாள்.

‘‘இந்த வழியில் அருவி இருக்கு.  குளிச்சுட்டு,  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு உன் அம்மாவைத் தேடலாம்'' என்ற அனு, ‘‘ஆமா... உனக்குத் தமிழ் தெரியுமா?’’ எனக் கேட்டாள்.

பதிலுக்கு விநோதமாகச் சத்தமிட்டது தாரா. அருவியில் குளித்து, பழங்களைப் பறித்து உண்டனர். பிறகு, தாராவின் தாயைச் சந்தித்தனர். உருவத்தில் ஒன்றுபோல இருந்ததால், தாராவின் தாயை அனுவால் அடையாளம் காணமுடிந்தது. தாய் டைனோசர் கண்ணீர் மல்க, தாராவைக் கட்டி அணைத்துக்கொண்டது.

அனு தயக்கத்துடன், ‘‘உன் குழந்தை மேலே இருக்கிற பாசம் புரியுது. ஆனாலும், தாராவை நான் வளர்க்கட்டுமா?’’ எனக் கேட்டாள்.

அனு நினைத்தாள், தாராவின் தாய்க்கும் தமிழ் தெரியாது என்று. ஆனால், ‘‘என் குட்டியை ஒளிச்சுவைக்காமல் நேர்மையா கூட்டிவந்து காட்டினதுக்காக, உன்னோட அனுப்பறேன்’’ என்றது.

அனு சந்தோஷத்துடன் தாராவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.

‘‘ஒரே ஒரு விஷயம்... மனிதர்களாகிய நீங்கள் சுயநலத்துடன் இருக்கீங்க. உணவு சங்கிலியில் ஓர் உயிரினம் அழிந்தாலும் ஆபத்து மொத்த பூமிக்கே. மரத்தை வெட்டி, காட்டை அழிச்சு, காற்றை மாசுபடுத்தி எல்லா வகையிலும் இயற்கையை இம்சிக்கிறதை நிறுத்துங்க. வருங்கால தலைமுறையான நீங்களாவது இதைச் செய்யுங்க'' என்றது அம்மா டைனோசர்.

அப்போது, ‘‘அனு... அருங்காட்சியகம் போகணும்னு சொன்னியே... சீக்கிரம் எழுந்திரு'' என்ற அம்மாவின் குரல் கேட்டு கண் விழித்தாள் அனுபல்லவி.

இவ்வளவு நேரம் நடந்தது கனவு என அவளால் நம்பவே முடியலை. ‘அது நிஜம்தான்... ஏதோ ஒண்ணு புரியாமல் இருக்கு' என நினைத்துக்கொண்டாள்.

தேடி வந்த டைனோசர்! - சிறுகதை

சற்று நேரத்தில் தயாராகி அருங்காட்சியகத்துக்குச் சென்றார்கள். ‘‘இதோ... இதுதான் அந்தக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் படிமம். தாயும் குட்டியும்'' என்றார் அப்பா.

அதைப் பார்த்த அனு திகைத்துப் போனாள். கனவில் பார்த்த அதே டைனோசர் தாயும் குட்டியும். அவை, அனுபல்லவியைப் பார்த்துப் புன்னகைப்பது போலவே இருந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism