Published:Updated:

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

Published:Updated:
சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

க்காக் குரங்குகள்... ஆசியக் கண்டத்தில் காணப்படும் குரங்கு வகை. உலகின் மிக மூத்த விலங்கு. பல லட்சம் ஆண்டுகள் வயதுடையவை. மனிதனோடு நெருங்கிப் பழகும். ஆசியக் கண்டத்தில் மட்டும் 23 இன மக்காக் குரங்குகள் உண்டு. அதில், திபெத்திய குரங்குகள் தோற்றத்தில் சற்றே மாறுபட்டவை.

‘உலகின் கூரை’ என்றுதான் திபெத்தை அழைப்பார்கள். கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அமைந்த பகுதி. உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் உடைய பகுதி. அங்கே, ‘கோங்போக்யம்தா’ என்பது, சீன மக்கள் குடியரசின் கீழ்வரும் திபெத் தன்னாட்சி பிரதேசம்.

இதன் வனப்பகுதியில், திபெத்திய மக்காக் வகைக் குரங்குகள் அதிகம் காணப்படும். நம் ஊர்க் குரங்குகளுக்கு உடலெங்கும் புசுபுசுவென முடி இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும். திபெத்தின் கடும்குளிரைத் தாங்க, இயற்கைக் கொடுத்த வரம்.

2000-ம்  ஆண்டில், அந்தப் பகுதிக்கு வனக்காவலராகப் பொறுப்பேற்றார், டோபர்க்யால் (Dobrgyal) என்ற திபெத்தியர். அந்தப் பிரதேசத்தின் இயற்கை அழகு அவரை வெகுவாகக் கவர்ந்தது. தன் எல்லைக்குட்பட்ட பகுதி முழுக்கச் சுற்றித் திரிந்தார்.

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

மக்காக் குரங்குகள் அதிகம் காணப்படும் பகுதி என்று வரலாறு சொல்கிறது. ஆனால், நினைத்த அளவுக்குக் குரங்குகளைப் பார்க்க முடியவில்லை.  அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தார்.

‘ஒரு காலத்தில் மக்காக் குரங்குகள் இங்கே அதிகம் இருந்தன. இப்போது அழிந்துகொண்டிருக்கின்றன’ என்றார்கள்.

டோபர்க்யாலுக்கு அதிர்ச்சி. தன் எல்லைக்குட்பட்ட வனப் பகுதி முழுக்க அலைந்து திரிந்து கணக்கெடுத்தார். ஐம்பதுக்கும் குறைவான மக்காக் குரங்குகளே இருந்தன. கூட்டமாக வாழும் தன்மைகொண்ட இவையே அழிய காரணம் என்னவாக இருக்கும்?

சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, தட்பவெப்ப நிலையில் மாற்றம், காடுகள் அழிப்பு, உணவு கிடைக்காத சூழல் எனப்  பல காரணங்களைப் புரிந்துகொண்டார். தவிர, திபெத்திய மக்காக் குரங்குகளின் புசுபுசு ரோமத்துக்காக, சட்டவிரோதமாக வேட்டையாடுவது தெரிந்தது. மக்காக் குரங்குகளைப் பாதுகாக்கும் பணிஒயில் இறங்கினார்.

தான் பணிக்குக் கிளம்பும்போது, கையில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்ல ஆரம்பித்தார் டோபர்க்யால். ஆரம்பத்தில், சில குரங்குகளே தயங்கித் தயங்கி அவரிடம் வந்தன. கனிவுடன் உணவு கொடுத்தார். சந்தோஷமாகப் பெற்று உண்டன. அடுத்தடுத்த நாள்களிலும் உணவு கொடுத்தார். அவர் மீதான பயம், பாசமாக மாறியிருந்தது.

‘இந்தக் குரங்குகளுக்குத் தினமும் உணவு கொடுக்க வேண்டும். என் பணிக்காலத்தில் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’ என டோபர்க்யால் தீர்க்கமான முடிவெடுத்தார்.

தினமும் அவர் வரும் நேரத்தை அந்தக் குரங்குகள் அறிந்திருந்தன. அவரைக் கண்டதும் கூட்டமாக ஓடிவந்து சூழ்ந்தன. அவர் மீதேறி விளையாடின. டோபர்க்யாலும் புன்னகையுடன் குரங்குகளோடு நேரம் செலவழித்தார்.

ஒரு பெண் குரங்கு, குட்டி போட்டால், அதைத் தனியாகக் கவனித்துக்கொண்டார். திபெத்திய மக்காக் குரங்குகளில் ஒன்று கூடிவிட்டது என்று மகிழ்ந்தார்.

சில ஆண்டுகளில், குரங்குகளின் எண்ணிக்கை நூறானது... இருநூறானது... 500 தாண்டியது. டோபர்க்யால், தனக்கு உடல்நிலை சரியில்லையென்றாலும், குரங்குகளைத் தேடிப்போவதை நிறுத்தவில்லை. தினமும் உணவுடன் வனப் பகுதிக்குச் செல்வார்.

‘என்னைக் குரங்குகள் தேடும். நான் வரவில்லை என்றால் தவித்துப் போய்விடும். பாவம், அவற்றுக்குப் பசிக்கும்!’ என்பார்.

ஒரு குரங்குக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தன் தோளில் அமரவைத்துக் கொண்டுவருவார். முறையான வைத்தியம் பார்த்து, மீண்டும் வனப் பகுதியில் சேர்ப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பர் ஹீரோஸ்! - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை!

முதுமையினாலோ, நோய்வாய்ப்பட்டோ, விபத்திலோ குரங்குகள் இறக்கும் நாளில், டோபர்க்யாலால் கண்ணீரை அடக்க முடியாது.

18 ஆண்டுகள் டோபர்க்யால் என்ற ஒற்றை மனிதனின் அர்ப்பணிப்பான சேவையால், இன்றைக்குத் திபெத்திய குரங்குகளின் எண்ணிக்கை 3000 என்று பெருகியிருக்கிறது. அந்தப் பகுதி மக்கள்,  ‘குரங்குகளின் தந்தை’ என்று டோபர்க்யாலைப் பெருமையுடன் அழைக்கிறார்கள்

அந்தத் தந்தையையும் அவரது பிள்ளைகளான ஆயிரக்கணக்கான குரங்குகளையும், அவர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பையும் காண்பதற்காகவே, இப்போதெல்லாம் நிறையச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
டோபர்க்யாலுக்கு இப்போது வயது 70. தனது வனக்காவலர் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும், குரங்குகளுக்கு உணவு அளிக்கும் பணியைத் தொடர்கிறார்.

‘என் உடம்பில் நடக்கும் சக்தி இருக்கும்வரை என் பிரியத்துக்குரிய குரங்குகளைத் தேடிவருவேன். எனது காலத்துக்குப் பிறகு, என் மகன்கள் இந்தப் பணியைத் தொடர்வார்கள் என நம்புகிறேன்’ என்கிறார் டோபர்க்யால்.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பது பொதுவான கருத்தாக இருக்கலாம்.  ஆனால், திபெத்திய மக்காக் குரங்குகள், அழிவிலிருந்து மீண்டுவந்தது இந்த ஒற்றை மனிதனால்தான்!

- முகில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism