தண்ணீரில் வண்ண வண்ண மீன்கள் சுற்றித்திரிவதைப் பார்த்தாலே மனதுக்குள் சந்தோஷம் பொங்கும். வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, ஹோட்டல் மற்றும் சில பொது இடங்களிலும் மீன்தொட்டிகள் வைத்திருப்பார்கள்.

ஆனால், வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்தில் இருக்கும் ‘அமிக்ஸ் காஃபி ரெஸ்டாரண்ட்’ உரிமையாளர், வித்தியாசமாக யோசித்துள்ளார். காஃபி ஷாப் தரையையே மீன்தொட்டியாக மாற்றியுள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசல் உயரமாகக்கொண்ட அறையின் தரையில், 25 செ.மீ உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியிருக்கும். வண்ணமீன்கள் நீச்சலடித்தவாறு இருக்க, வாடிக்கையாளர்கள் கவனமாக உள்ளே வந்து அமர்ந்து, தண்ணீரில் கால்களை வைத்து, மீன்களுடன் விளையாடியவாறே விரும்பியதைச் சாப்பிடலாம்.

இந்த ஹோட்டலுக்குள் காலணிகளைக் கழற்றி, கால்களை நன்றாகக் கழுவிக்கொண்டுதான் நுழைய வேண்டும். அந்த மெகா தொட்டியின் தண்ணீரையும் தவறாமல் மாற்றுகிறார்கள்.