
ஹாய் சுட்டீஸ்... விடுமுறை வருது. உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க, ஈஸியான வால் ஹேங்கிங் கிராஃப்ட்டை சொல்லித் தருகிறார்கள், சாய் சம்யுக்தா மற்றும் அவர் அம்மா சோபனா.
தேவையானவை:
* உல்லன் நூல்கண்டு - 4 (விரும்பும் வண்ணங்களில் )
* பலூன் - 7
* கத்தரிக்கோல் - 1
* க்ளிட்டர் செலோ டேப் - 2 (விரும்பும் வண்ணங்களில் )
* ஃபெவிக்கால் - 1
* வெவ்வேறு அளவிலான ஆரி ரிங் - 2 (வீட்டில் பயன்படுத்தாத குக்கர் காஸ்கெட் முலமும் செய்யலாம்)
செய்முறை:
ஸ்டெப் - 1
பலூன்களை ஒரு சிறிய பந்து அளவுக்கு ஊதிக்கொண்டு, காற்று வெளியேறாமல் இருக்க, முடிச்சிடவும்.
ஸ்டெப் - 2
பலூன்கள் மீது ஃபெவிக்காலை அப்ளை செய்யவும்.
ஸ்டெப் - 3
பலூன் மீது வண்ண நூலை, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றவும்.
ஸ்டெப் - 4
நூல் சுற்றிய பலூனைச் சிறிது நேரம் காயவிடவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்டெப் - 5
பலூன் மீது சுற்றிய நூல் காய்ந்ததும், ஊசியால் பலூனைக் குத்தி, பலூனில் இருக்கும் காற்றை வெளியேற்றவும்.
ஸ்டெப் - 6
காற்று இறங்கிய பலூனைப் படத்தில் காட்டியபடி, சுற்றிய நூல் பந்திலிருந்து வெளியே எடுக்கவும்.
ஸ்டெப் - 7
வால் ஹேங்கிக்கான நூல் பந்து தயார்.

ஸ்டெப் - 8
இதேபோன்று வெவ்வேறு நிறங்களைப் பயன்படுத்தி, 7 நூல் பந்துகள் செய்துகொள்ளவும்.
ஸ்டெப் - 9
வால் ஹேங்கில் நூல் பந்தைத் தொங்கவிடுவதற்கு வசதியாக, நூல் பந்தின் மேற்புறம், நூலைக் கோத்து முடிச்சிடவும்.
ஸ்டெப் - 10
படத்தில் காட்டிபடி ஆரி ரிங் மீது செலோ டேப் சுற்றவும்.
ஸ்டெப் - 11
செலோ டேப் சுற்றிய ரிங்கின் நான்கு மூலைகளிலும், படத்தில் காட்டியபடி, மேற்புறமாக நூலைக் கட்டிக்கொள்ளவும்.
ஸ்டெப் - 12
இரண்டு ரிங்கையும் முடிச்சிட்டு, ஒன்றாக இணைத்தால், ரிங் ஹேங்கிங் தயார்.
ரிங் ஹேங்கிங்கில் நாம் செய்துவைத்துள்ள நூல் பந்துகளை மேலும் கீழுமாகக் கோத்துக்கொள்ளவும்.
உங்கள் வீட்டை அலங்கரிக்க, வண்ணமயமான வால் ஹேங்கிங் ரெடி!
- சு.சூர்யா கோமதி, படங்கள்: ப.பிரியங்கா.