Published:Updated:

ஊ...ஊ...ஊசி!

ஊ...ஊ...ஊசி!
பிரீமியம் ஸ்டோரி
ஊ...ஊ...ஊசி!

ஊ...ஊ...ஊசி!

ஊ...ஊ...ஊசி!

ஊ...ஊ...ஊசி!

Published:Updated:
ஊ...ஊ...ஊசி!
பிரீமியம் ஸ்டோரி
ஊ...ஊ...ஊசி!

லகத்திலேயே பல பலசாலிகளுக்கும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா? ஊசி. ‘ஐயையோ வேணாம்’னு பில்டிங் குலுங்க அழும் குழந்தைகளைப் பார்த்திருப்போம்.  இந்த ஊசி அவ்வளவு முக்கியமா? வாங்க பார்ப்போம்!

* ஊசியைக் கண்டுபிடித்தவர், அயர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர், ஃபிரான்சிஸ் ரியான் (1844-ம் ஆண்டு).

* நரம்பு வலியால் சிரமப்பட்ட ஒரு நோயாளியைத் தூங்கவைக்கவே முதன்முதலில் ஊசி போடப்பட்டது. அது, தோலுக்கு அடியில் போடும் வகையைச் சேர்ந்தது.

ஊ...ஊ...ஊசி!

*1850-களில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவர், சார்லஸ் கேபிரியல் பிரவாஸ் மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் அலெக்ஸாண்டர் வுட் ஆகியோர், சிரிஞ்சுடன் ஊசியைக் கண்டறிந்தனர்.

* ஊசியின் பின்னால் இருக்கும் சிரிஞ்சு, மிகப்பெரிய வேலையைச் செய்கிறது. மருந்து பாட்டிலில் இருக்கும் மருந்தை உறிஞ்சுவதற்கும், உறிஞ்சப்பட்ட மருந்தை ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தவும் சிரிஞ்சு  பயன்படுகிறது.

* 0.5 மில்லி அளவிலிருந்து 100 மில்லி வரை சிரிஞ்சுகள் உள்ளன. சிரிஞ்சுபோலவே ஊசியின் அளவும் மாறுபடும். ஊசியின் நீளம் மற்றும் அகலம் கேஜ் (Gauge) என்ற அளவில் கணக்கிடப் படுகிறது. 1 கேஜ் என்பது 7.348 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது. 26 கேஜ் முதல் 15 காஜ் அளவு வரை உள்ள ஊசிகளை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

* முன்காலத்தில் கண்ணாடியாலான சிரிஞ்சுகளே பயன் படுத்தப்பட்டன. ஒருவருக்குப் பயன்படுத்திய சிரிஞ்சை, சுடுநீரில் போட்டு கிருமி நீக்கம் செய்த பிறகே, அடுத்தவருக்குப் பயன்படுத்துவர். இப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ‘டிஸ்போசபிள் சிரிஞ்ச்’ புழக்கத்தில் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊ...ஊ...ஊசி!

* மாத்திரை, மருந்து, டானிக் எல்லாம் இருக்கும்போது ஏன் ஊசி போடணும்? மாத்திரை மருந்து சாப்பிட்டதுமே  வயிற்றுக்குள் கரைந்து, வேலை செய்ய ஒரு மணி நேரம் ஆகும். ஊசி போட்டால், அரை மணி நேரத்தில் மருந்து வேலை செய்யத் தொடங்கும். நோயும் விரைவில் குணமாகும்.

* வயிறு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், வாய் வழியாக மாத்திரை விழுங்க முடியாதவர்கள், அறுவை சிகிச்சை செய்ததால் சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க முடியாது. அதனால், ஊசி போடுவார்கள்.

* பொதுவாக, இடுப்புக்குக் கீழ் பகுதியில்தான் ஊசி போடப்படும். அந்தப் பகுதியில்தான் அதிக அளவில் தசை காணப்படும். சில ஊசிகள் கையிலும், சில குழந்தைகளுக்குத் தொடையிலும் ஊசி போடுவார்கள். தசை குறைவாக இருக்கும் இடங்களில் ஊசி போட்டால் வலி அதிகமாக இருக்கும். கை, இடுப்புக்குக் கீழ், தொடை என எந்தப் பகுதியில் ஊசி போட்டாலும், மருந்து வேலை செய்ய ஒரே நேரம்தான் எடுத்துக் கொள்ளும்.

* சில ஆன்டிபயாடிக் மருந்துகள் 10 அல்லது 20 மில்லி அளவில் கொடுக்க வேண்டும். அதிக அளவு மருந்துகளை ஊசி மூலம் தசையில் போடமுடியாது. அப்படிப் போட்டால், அந்த இடம் பெரிய அளவில் வீங்கிவிடும். அதிகபட்சம் 2 மில்லி மருந்து வரையே தசையில் போடலாம்.

* நோய்க்கான ஊசிகள் தவிர, நோய்த் தடுப்புக்காகப் போடப்படுவது, தடுப்பூசி. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜென்னர் என்ற மருத்துவர், பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்.

* தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் பெரியம்மை, போலியோ ஆகிய நோய்கள் கட்டுக்குள் வந்தன. உலகச் சுகாதார நிறுவனமும் இந்தியாவில் இந்த இரண்டு நோய்களும் இல்லை என்று அறிவித்துள்ளது.

* சில தடுப்பூசிகள் நோய் உண்டான பிறகும் போடப்படும். உதாரணத்துக்கு, நாய்க்கடியினால், ரேபிஸ் என்ற வைரஸ் தாக்காமல் இருக்கப் போடப்படுவது.

ஊ...ஊ...ஊசி!

* தடுப்பு மருந்துகள் பெரும்பாலும் ஊசி வழியாகவே கொடுக்கப்படும். ஊசி மூலம் கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகள், ரத்தத்தில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும். குடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதற்காகச் சில தடுப்பு மருந்துகள் சொட்டு மருந்தாக வாய்வழியாகக் கொடுக்கப்படும்.

* எல்லா மருந்துகளிலும் குறிப்பிட்ட காலம் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்க, எண்ணெய் போன்ற வேதிப்பொருள் சேர்க்கப்படும். அதனை, ‘ஆயில் இன்ஜெக் ஷன்’ (Oil injection) என்பார்கள். அந்த வேதிப்பொருளைச் சேர்த்த தடுப்பூசி மருந்துகள் சற்று கெட்டியாக இருக்கும். கெட்டியாக இருக்கும் மருந்துகளைப் போடும்போது, லேசான வலி இருக்கும். வலியைக் குறைக்கப் போடப்படும் ஊசியும் சில நேரம் வலி மிகுந்ததாக இருக்கும்.

ஊசியைப் பற்றிய தகவல்கள், அதன் முக்கியத்துவம் தெரிஞ்சுகிட்டீங்களா ஃப்ரெண்ட்ஸ்... அடுத்த முறை டாக்டரிடம் போகும்போது, ஊசியைச் சமத்தா போட்டுக்கங்க!

- ஜெனிஃப்ரீடா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism