Published:Updated:

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

Published:Updated:
டிப்ஸ்... டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்... டிப்ஸ்...

குழந்தை வளர்ப்பில் தாய்மார்களுக்கு எப்போதும் சந்தேகங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இதழ்கள் முதல் இணையம் வரை அது தொடர்பான தகவல்களைத் தேடித்தேடிப் படிப்பார்கள். அவர்களுக்காக இந்த இதழில் நிறைந்திருக்கும் பெற்றோர்களுக்கான பேரன்ட்டிங் டிப்ஸ்களை வழங்கியிருப்பவர், சென்னையைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவர் பிரேம்குமார்.

டிப்ஸ்... டிப்ஸ்...

குழந்தைக்குப் பத்தாவது மாதத்துக்குப் பிறகு பால் பற்கள் முளைக்கத் தொடங்கும். ஒன்றரை வயதில் அதிக எண்ணிக்கையிலான  பற்கள் முளைத்துவிடும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குப் பல் துலக்கும் பயிற்சியைக் கொடுக்கலாம். அதற்காக எடுத்த எடுப்பிலேயே பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். முதலில் வாய் கொப்பளிக்கும் பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள், அடுத்து பல் துலக்கக் கற்றுக்கொள்ளும்போது பேஸ்ட் எசென்ஸை விழுங்காமல்  இருப்பார்கள். வாய் கொப்பளிக்கப் பழக்கிய பிறகு, அம்மாக்கள் தங்கள் விரல்களால் குழந்தைகளின் பற்களைத் தேய்த்துவிடலாம். இரண்டு வயதுக்குப் பின்னர் குழந்தைகளுக்கான பிரத்யேக சாஃப்ட் பிரஷ்களைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பல் துலக்கிவிட வேண்டும்.

பெற்றோர்கள் பலர், பழங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்குச் சளி பிடித்துக்கொள்ளும் என எண்ணி, பழங்களைக் குழந்தைகள் சாப்பிடப் பழக்காமல் விட்டுவிடுகிறார்கள். பின்னர் 10 வயதுக்குப் பின் குழந்தை ஆரோக்கியமாக இல்லை எனப் பழங்களைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அப்போது வற்புறுத்திக்கொடுக்கும்போது, குழந்தைகளுக்குப்  பழங்களின் மீது விருப்பமே இல்லாமல் போய்விடும். எனவே, ஒரு வயதில் இருந்தே பழங்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் கைகளில் கொடுத்துச் சாப்பிடப்  பழக்கப்படுத்துங்கள்.
தொகுப்பு: சு.சூர்யா கோமதி
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலை நேரச் சூரிய ஒளி தினமும் 10 நிமிடங்கள் குழந்தைகளின் சருமத்தில் படும்படிச் செய்வது நல்லது. இதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைத்து எலும்புகள் உறுதிப்படும்.

குழந்தைகளை வாக்கரில் உட்காரவைக்கும்போது அவர்கள் கால்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படும். எனவே, வாக்கரைத் தவிர்த்து நடை வண்டியின் மூலம் குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கலாம்.

ரபு, உணவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையின் எடையும் வேறுபடும். மற்ற குழந்தைபோல் நம் குழந்தை குண்டாக இல்லையே எனக் கவலைப்பட வேண்டாம். பொதுவாக, 2.3 கிலோ கிராம் என்பது பிறந்த குழந்தையின் சராசரி எடை. பிறந்து ஐந்து மாதத்தில் பிறப்பு எடையில் இருந்து குழந்தையின் எடை இரு மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். ஒரு வயதில், பிறப்பு எடையிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்தாலே ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். குறைந்த எடை, மிக அதிக எடை என இதில் அதிகப்படியான வேறுபாடுகள் இருப்பின் குழந்தைநல மருத்துவரை அணுகவும்.

`என் குழந்தையை சோஷியல் மீடியாவில் பாப்புலர் ஆக்குகிறேன்' என்ற பெயரில் டிக்டாக், மியூசிக்கலி வீடியோ போன்றவற்றை செய்யசொல்லி பழக்கப்படுத்த வேண்டாம். இது, விளையாட்டு, ஓவியம் என அவர்களுக்குள் இருக்கும் திறன்களை இயற்கையாக வெளிப்படுத்துவதில் இருந்து அவர்களை விலக்கி, அவர்களின் வயதுக்கு மீறிய இந்தச் செயற்கை வீடியோக்களில் ஆர்வம் கொள்ள வைத்துவிடும்.

ள்ளியில் அதிகப்படியான ஹோம்வொர்க் தருகிறார்கள் எனில், பள்ளியில் சென்று முறையிட பெற்றோர்களுக்கு முழு உரிமையும் உண்டு. `வேண்டாம், நான் பள்ளியைப் பகைத்துக்கொள்ள மாட்டேன்' என்ற மனநிலையுடன் குழந்தைகளை வீட்டுப்பாட அடிமைகள் ஆக்காதீர்கள். இது அவர்களுக்குப் படிப்பு மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். உங்கள் குழந்தையை எக்காரணம் கொண்டும் மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். இது அவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும் என்பதை மனதில்கொள்ளுங்கள்.

குழந்தைக்கு எட்டு மாதங்கள் முடிந்த பின்னர், நட்ஸை வறுத்துப் பொடித்து உணவில் சேர்த்துக் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒன்றரை வயதுக்குப் பின்னர், அவர்களின் கைகளில் நட்ஸை முழுதாகக் கொடுத்துச் சாப்பிட வைக்கலாம். இது அவர்களுக்கு எனர்ஜியைக் கொடுக்கும். குழந்தையின் இரண்டு வயது வரை, கடைகளில் விற்கும் உணவுகளை வாங்கி ஊட்டுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ன்றரை வயதுக்குப் பின் குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சி வழங்க ஆரம்பிக்க வேண்டும். இரண்டு வயதுக்குப் பின்னும் குழந்தைகளின் பேச்சுச் திறனில் முன்னேற்றம் இல்லையெனில், அவர்களின் கேட்கும் திறனில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். படிப்பு அல்லாத மற்ற திறன் சார்ந்த செயல்பாடுகளில் உங்கள் குழந்தையின் கவனத்தைக் கொண்டுவர, மூன்று வயது வரை பொறுத்திருக்க வேண்டும். அதற்கு முன் அவர்களைக் கட்டாயப்படுத்தி எந்தச் செயலிலும் ஈடுபடுத்த வேண்டாம்.

நாம் சொல்லும் விஷயங்களைக் குழந்தைகள் தெளிவாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் நான்கு, ஐந்து வயதுகளில் `குட் டச் பேட் டச்' பற்றியும், எப்படி அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரம் சக குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பொறுமையாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism