Published:Updated:

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

லகின் முதல் தொழில், முதன்மையான தொழில் விவசாயம். அதுதான் நமக்கு உணவு அளித்து, நம்மை எல்லாம் வாழவைக்கிறது. அந்த விவசாயிகள் வாழுமிடமே, ஒவ்வொரு நாட்டின் உயிர்மூச்சான கிராமங்கள்தான்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

அந்தக் கிராமங்களின் மனிதர்களும், இடங்களும், விளையாட்டுகளும், விழாக்களும் இயற்கையுடன் இணைந்தவை. அதிலும், தமிழர்களின் தனித்துவம் சிறப்பானது. நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் சில நாள்களாவது கிராமத்துக்குச் சென்று, அந்த வாழ்வை வாழ வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

இந்தப் பொங்கல் தினத்தை கிராமம் சார்ந்த சில அடையாளங்களை, ‘நம்ம ஊரு நம்ம  மண்’ என  பார்க்கலாம் வாங்க!

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

ஏர் கலப்பை

நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்தும் கருவி. இன்றும் சில இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. கலப்பையில் மாடுகளைப் பூட்டி நிலத்தை உழுவார்கள்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

மரக்கால்

தானியங்களை அளக்கப் பயன்படுத்தப்படும் பெரிய முகத்தல் அளவை. இதுதவிர, அம்பானம், நாழி, பதக்கு போன்ற அளவைக் கருவிகளும் முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டன.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

நெல் அண்டா

நெல் அவிப்பதற்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய கனமான பாத்திரம். இந்த நெல் அண்டாக்களை அவ்வளவு விரைவாக அடுப்பில் ஏற்றி இறக்கிவிட முடியாது. ஓர் அண்டாவில் ஒரு மூட்டை நெல்லையும்  வேகவைக்கலாம்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

பத்தாயம்

மாம்பலகை, பலாப்பலகையில செய்யப்படும். செவ்வகம், சதுரம் என இரண்டு வடிவங்களில் இருக்கும். தனித்தனி பெட்டிகளாகச் செய்து, ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். இதை நெல் சேமிக்க பயன்படுத்தினர் விவசாயிகள்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

கமலை ஏற்றம்

கமலை ஏற்றம் என்பது, இரண்டு மாடுகளைப் பூட்டி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைக்கும் சாதனம். இன்றைக்குப் பட்டனைத் தட்டினால் பைப் மூலம் தண்ணீர் மேலே வந்துவிடும். ஆனால், அன்றைக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, 1 ஏக்கருக்குப் பாய்ச்ச குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

கதிர் அரிவாள்

முற்றிய நெல் மற்றும் சோளக் கதிர்களை அறுவடை செய்ய பயன்படுத்தும் கருவி, கதிர் அரிவாள்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

தானிய குதிர்:

நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை நீண்ட காலம் சேமித்துவைக்க, தானியக்குதிர்களைத்தான் முன்னோர்கள் பயன்படுத்தினர். 1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பதனப்படுத்துதலில் புகுத்தப்பட்ட நவீனம் காரணமாக, தானியக்குதிர்கள் வழக்கொழிந்துவிட்டன. ஆனாலும், தமிழ்நாட்டின் பச்சமலை, ஜவ்வாது மலை போன்ற மலைப் பகுதிகளில் தானியக்குதிர்களிலேயே சேமிக்கிறார்கள், பழங்குடியின மக்கள்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

நெற்களம்

விவசாயிகள் நெல்லை தூற்றப் பயன்படுத்தும் ஓர் இடம். இங்குதான் நெல் தூற்றி பைகளில் அடைத்து, கொண்டுசெல்வர்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

தாழிப்பானை

களிமண், வைக்கோல் இரண்டையும் சேர்த்து செய்யப்படும். சில தாழிப்பானைகள் ஆறடி உயரம் இருக்கும்.  அடிப்பகுதி மற்றும் மேல் பகுதி குறுகியும்,  நடுப்பகுதி பருத்தும் காணப்படும். இதைப் பெரும்பாலும் சிறு விவசாயிகள்தான் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்

கவண் கல்

தானியங்களை மேய வரும் பறவைகளை விரட்டப் பயன்படும் ஒரு கருவி. இது அதிகமாக தோட்ட வேலை செய்பவர்கள், பண்ணைப் பராமரிப்பாளர்கள் பயன்படுத்துவார்கள்.

- தொகுப்பு: யுவா, துரை.நாகராஜன், ஜி.லட்சுமணன், சி.வெற்றிவேல்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி