Published:Updated:

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்
பிரீமியம் ஸ்டோரி
News
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

லகின் முதல் தொழில், முதன்மையான தொழில் விவசாயம். அதுதான் நமக்கு உணவு அளித்து, நம்மை எல்லாம் வாழவைக்கிறது. அந்த விவசாயிகள் வாழுமிடமே, ஒவ்வொரு நாட்டின் உயிர்மூச்சான கிராமங்கள்தான்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

அந்தக் கிராமங்களின் மனிதர்களும், இடங்களும், விளையாட்டுகளும், விழாக்களும் இயற்கையுடன் இணைந்தவை. அதிலும், தமிழர்களின் தனித்துவம் சிறப்பானது. நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் சில நாள்களாவது கிராமத்துக்குச் சென்று, அந்த வாழ்வை வாழ வேண்டும்.

இந்தப் பொங்கல் தினத்தை கிராமம் சார்ந்த சில அடையாளங்களை, ‘நம்ம ஊரு நம்ம  மண்’ என பார்க்கலாம் வாங்க!


லைவலியா... ஜலதோஷமா? உடனே டாக்டரிம் போய், ஊசியும் மாத்திரையுமா திரும்புவது நகரின் வழக்கம். ஆனால், நாம் உண்ணும் உணவுப் பொருளிலேயே, நம்மைச் சுற்றி கிடைக்கும் தாவரங்கள் மூலமே எந்தவித பின்விளைவுகளும் இல்லாத வைத்தியத்தைப் பின்பற்றினார்கள் முன்னோர்கள். இப்போதும் பல கிராமங்களில் பின்பற்றுகிறார்கள். ‘பாட்டி வைத்தியம்’ எனச் சொல்லப்படும் அவற்றில் சிலவற்றை நாமும் பின்பற்றலாம். நோய்களுக்கு விடை கொடுக்கலாம்’ என்கிறார், கி.இளம்பிறை. வீட்டில் அம்மாவிடம் சொல்லி தேவைப்படும்போது பின்பற்றலாமே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

இருமல் விலக...

தேங்காய் எண்ணெய்யைச் சிறிதளவு ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சூடுபடுத்தி இறக்கவும். தேவைக்கேற்ப கற்பூரத்தை தூளாக்கிச் சேர்த்து, இளஞ்சூட்டிலேயே நெஞ்சு, விலா, மூக்குப் பகுதிகளில் தடவவும். இருமல், மூக்கடைப்பு விலகும். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றது.

புண், சிராய்ப்புகள் ஆற...

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூளைச் சேர்க்கவும். அதை அப்படியே இரண்டு அல்லது மூன்று தடவை மேற்பூச்சாகப் பூசினால், புண் மற்றும் சிராய்ப்புகள் சரியாகும்.

சுளுக்கு நீங்க...

குழந்தைகள் விளையாடும்போது திடீரென விரல்களில் சுளுக்கிக்கொள்ளும். இதற்கு வேப்ப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யைக் கரண்டியில் ஊற்றி, லேசாகச் சூடுபடுத்தவும். அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

நாக்கில் புண் ஆற...

உடல்சூட்டால் நாக்கு, உதடுகளின் இருபக்கமும் புண்கள் வரலாம். வெண்ணெய் அல்லது நெய்யை இந்தப் புண்களின் மேல் தடவி வந்தால், சீக்கிரம் குணமாகும்.

தலைவலி விலக...

வெள்ளைப்பூண்டை நசுக்கினால் அதிலிருந்து பிசுபிசுப்பாக சாறு வரும். அதை நெற்றியில் தடவினால் தலைவலி விலகும். பச்சிளம் குழந்தை களுக்குத் தலைவாரும்போது சீப்பின் பற்கள் பட்டு தலையில் புண் உண்டாகி சீழ் பிடித்தாலும், வெள்ளைப்பூண்டு சாற்றைத் தேய்த்தால் குணம் கிடைக்கும்.

காய்ச்சல் குறைய...

கருப்பட்டியுடன் போதுமான நீர் சேர்த்து அடுப்பில் சூடாக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், தூளாக்கிய மிளகு மற்றும் சுக்கு சேர்த்து மீண்டும் சூடாக்கி இறக்க வேண்டும். அதனுடன் துளசி இலைகளைச் சேர்த்து ஆறவைத்து வடிகட்டவும். அதில் தேங்கும் துளசியை முதலில் சாப்பிட வேண்டும். பிறகு, வடிகட்டிய சாற்றைக் குடித்தால், காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.

வறட்டு இருமல் சரியாக...

கருப்பட்டியை நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அதனுடன் துளசி, முள் நீக்கிய தூதுவளை, அருகம்புல் ஆகியவற்றைச் சேர்க்கவும். இலைகளின் சாறு இறங்கியதும் வடிகட்டிக் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் வறட்டு இருமலைப் போக்கும்.

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்

தொண்டைப் புண் குணமாக...

நெய் சிறிதளவு எடுத்து பாத்திரத்தில் ஊற்றி லேசாகச் சூடுபடுத்தவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகம் சேர்க்க வேண்டும். அது நன்றாகப் பொரிந்ததும் சாப்பாட்டுடன் சேர்ந்து பிசைந்து சாப்பிட்டால், தொண்டைப் புண் சரியாகும்.

கழுத்து, தோள்பட்டை வலி போக்க...

புளியை நீரில் ஊறவைத்து, தேன் பதத்துக்குக் கட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். அந்தப் புளிக்கரைசலில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து சூடுபடுத்தினால் நுரைகூட்டி வரும். அல்வா பதத்தில் இருக்கும். இதைக் கழுத்து, தோள்பட்டையில் ஏற்படும் வலி மற்றும் சுளுக்குக்குப் பயன்படுத்தலாம்.

* 10 வாரத்துக்கு ஒரு முறையாவது மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த ரசம் வைத்துக் குடித்தால் நோய்கள் எதுவும் அண்டாது.

- தொகுப்பு: யுவா, துரை.நாகராஜன், ஜி.லட்சுமணன், சி.வெற்றிவேல்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி