Published:Updated:

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா

கிராமம் என்றாலே வண்ணமயமான திருவிழா நினைவுக்கு வரும். அது சார்ந்த விளையாட்டுகள் இருக்கும். அதில் சில...

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா

* வத்தலக்குண்டு பக்கத்தில் சேவுகம்பட்டி கிராமத்தின், சோலைமலை அழகர் பெருமாள் கோயில் திருவிழா வித்தியாசமானது. ஊர்மக்கள் கூடை கூடையாக வாழைப்பழங்களை எடுத்துவந்து சாமிக்குப் படைப்பார்கள். பிறகு, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவார்கள். இதற்கு, ‘சூறை விடுதல்’ எனப் பெயர். நேர்த்திக்கடனாகவும், ஊரு நன்றாக இருக்கவும் செய்வது.

நீளமான மூங்கில் மரக்கட்டையை நட்டு, எண்ணெய், உளுந்துமாவு, க்ரீஸ் தடவி வழவழப்பாக்குவார்கள். `வழுக்கு மரம்' எனப் பெயர். அதன் உச்சியில், பண முடிப்பு, பரிசுப் பொருள்கள் கட்டுவார்கள். உச்சியில் ஏறி பண முடிப்பை எடுக்க வேண்டும். மாரியம்மனுக்குப்  பொங்கல் படைத்துவிட்டு, வழுக்கு மரம் ஏறுவார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா

‘கோகுலாஷ்டமி’ சமயத்தில் உறியடி எனப்படும் பானை உடைத்தல் போட்டி நடக்கும். பானைக்குள் மஞ்சத்தண்ணி, காசு போட்டுக் கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். துணியால கண்ணைக் கட்டிக்கொண்டு அடிக்க வேண்டும். பானைக்குள்ள சாணம்   கரைத்தும் கலாட்டா செய்வதுண்டு.

பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு என்கிற ‘ஏறு தழுவுதல்’ பிரபலம். அதில்,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை, வாடிவாசல் வழியா வெளியே வந்த பிறகே ஜல்லிக்கட்டு தொடங்கும்.  

நம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா

பொங்கல் திருவிழாவில், `ரேக்ளா ரேஸ்' என்கிற  மாட்டுவண்டிப் பந்தயம். தென் மாவட்டங்களிலும்  கொங்கு நாட்டுப் பக்கமும் இந்தப் போட்டி பிரபலம். சில கிராமங்களில் குதிரைகளைப் பயன்படுத்துவாங்க.

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், காத்தவராயன் வழிபாட்டுத் தலங்களில் ‘காத்தவராயக் கழுவேற்றக் கூத்து’ நடக்கும். காத்தவராயன் கழுவேற்றியதின் நினைவாக நடப்பது. திருச்சி காவிரிக் கரையோரம் உள்ள பாச்சூர் கிராமத்தில் ஒவ்வொரு வருஷமும் பங்குனி மாதம் கழுவேற்ற விழா நடக்கும்.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடும் கோமாளி ஆட்டத்தை ‘உறுமி கோமாளியாட்டம்’ என்பார்கள். ஒருவர் உறுமி வாசிக்க, ரெண்டு பேர் கோமாளி வேடத்தில் ஆடுவார்கள். திருச்சி, சேலம், ஆற்காடு பகுதி கிராமங்களில் பிரபலம். ஊர்க்காவல் தெய்வங்களுக்காக நடத்துவது.