Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

வாஜ்பாய் 100

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்து, பல உறுதியான முடிவுகளை எடுத்தவர், அடல் பிகாரி வாஜ்பாய். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். நாடாளுமன்றத்தில் 50 வருட உறுப்பினராக இருந்தவர். இவரது பிறந்தநாளை (டிசம்பர் 25) முன்னிட்டு, 100 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. கட்சிகளைக் கடந்து அனைவரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்த வாஜ்பாய்க்கு செய்யப்பட்ட சிறப்பு இது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

3D உணவு இயந்திரம்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள ஃபுட்டினி (Foodini) என்ற நிறுவனம், அசத்தலான 3D உணவு அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. கேக் போன்ற உணவுப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இதற்குள் வைத்துவிட்டால் போதும். சில நிமிடங்களில் விரும்பும் வடிவத்தில் சுவையான கேக் மற்றும் பிஸ்கட் ரெடியாகிவிடும். மைக்ரோவேவ் ஓவனில் தயாரிக்கப்படுவதைவிட சுவையாக இருக்கிறதாம், இதில் தயாராகும் உணவுகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுட்டி ஸ்டார் நியூஸ்!

பழங்களும் மருத்துவக் குணங்களும்

கற்பூரவாழை: கண்ணுக்குக் குளிர்ச்சி.

செவ்வாழை: கல்லீரல் வீக்கம், சிறுநீர் பிரச்னைகளைத் தீர்க்கும்.

பேயன் வாழை: வெப்பத்தைக் குறைக்கும்.

நேந்திரம் பழம்: இரும்புச்சத்து கொடுக்கும்.

திராட்சை: ரத்த அழுத்தம் குறைக்கும்.

நாவல் பழம்: நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

கொய்யாப்பழம்: கல்லீரல் பலப்படும்.

அத்திப்பழம்: நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

உயரமான காவலர்!

7.6 அடி உயரமான ஐக்தீப் சிங், ‘உலகின் உயரமான போலீஸ்காரர்’ என்ற சிறப்பு பெற்றுள்ளார். இவரின் எடை 160 கிலோ. பஞ்சாப் மாநில காவல்துறையில் பணிபுரிகிறார். இவர் அணியும் காலணியின் அளவு 19. வெளிநாட்டிலிருந்து வரவைக்கப்படுகிறது. இவர் சாலையில் இறங்கினாலே பெரும் கூட்டமே கூடிவிடுகிறது. செஃல்பி எடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். சமூக வலைத்தளங்களின் வைரல்களில் ஜக்தீப் சிங்கும் ஒருவர்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!
சுட்டி ஸ்டார் நியூஸ்!

தேசியகீதங்களின் வகைகள்!

தேசியகீதங்கள் 4 வகைகளில் பாடப்படுகின்றன.

அணி வகுப்பு வகை: பிரான்ஸ், சிங்கப்பூர் அமெரிக்கா.

கடவுள் துதி வகை: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, ஆப்பிரிக்கா.

இசைக்கருவி ஒலி வகை: அரபு எமிரேட்ஸ், மேற்காசிய நாடுகளில்.

நாட்டுப்புறப் பாடல் வகை
: இந்தியா, பங்களாதேஷ்.