Published:Updated:

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18
பிரீமியம் ஸ்டோரி
News
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘சுட்டி ஸ்டார் ஸ்பெஷல்’ பக்கங்கள் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 15.02.2019

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18

இடமிருந்து வலம்

1. நேபாளத்தின் தலைநகர் (5)

6. வனம் என்பதை இப்படியும் அழைக்கலாம் (2)

8. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். அந்த இடம் இருப்பது ..... (2)

17. தோலுக்கு அடுத்து உள்ளதை ...... என்பர் (2)

வலமிருந்து இடம்

4. காசி, பனாரஸ் என அழைக்கப்படும் ஊர் (4)

9. நோய் குணமாக வேண்டும் என்றால், இதைச் சாப்பிட வேண்டும் (4)

10. ஒரு விளையாட்டு, சுறுசுறுப்புடன் வேலைச் செய்பவர்களை இதனுடன் ஒப்பிடுவர் (5)

12. அன்டார்ட்டிகா ஒரு பனிப் ------ (5)

13. புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள புள்ளியை, வட ........ என்பர். (4)

14. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் மாதம் (2)

19. -------- தின்ன கூலி வேண்டுமா? (4)

21. இது இரண்டாகப் பிரிந்து, பங்களாதேஷ் உருவானது (5)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18

மேலிருந்து கீழ்

1. அறிஞர் அண்ணா பிறந்த ஊர் (6)

2. வயலும் வயலைச் சார்ந்த இடமும் (4)

3. உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. ஆப்பிரிக்காவில் இருக்கிறது. (5)

4. ‘வீர விஜயன்’, ‘பலே பாலு’ போன்ற  குழந்தைகள் கதைகள் எழுதிய எழுத்தாளர் (5)

10. ------- வந்தால் பத்தும் பறந்துபோகும். (2)

11. இல்லை என்பதற்கு எதிர்ச்சொல் (2)

15. உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறை தங்கம் வென்றவர். (4)

16. இந்தியாவுக்கு அருகில் இருக்கும் தீவு நாடு (4)

கீழிருந்து மேல்

5. பறவையை இப்படியும் சொல்லலாம். (3)

7. தொகுப்பு (4)

18. ------ சிறந்த தோழன். (5)

19. ---------- சிறுத்தாலும் காரம் குறையாது. (3)

20. பறக்க முடியாத பறவைகளில் ஒன்று. நன்றாக நீந்தும். (5)

21. குழந்தைக் கவிஞர். ‘மாம்பழமாம் மாம்பழம்’ பாடலை எழுதியவர். (6)

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18

இந்தப்  போட்டிக்கான விடை மார்ச் 15, 2019 இதழில் இடம்பெறும்.

- சங்கீதா

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 18