Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி ஸ்டார் நியூஸ்!

தகவல்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

எறும்பு

மண்ணைக் குவிப்பதில் எறும்புகள் அசாகய சூரர்கள். ஒரு சதுரமைல் பரப்புக்கு, ஓர் ஆண்டு காலத்துக்குள் ஓர் எறும்பு மட்டுமே குவிக்கும் மண்ணின் அளவு 50 டன்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எறும்புகள் உணவுத் துணுக்குகளை மட்டும் சாப்பிடுவதில்லை. சில வகைப் பூச்சிகளின் உடலில் சுரக்கும் பால் போன்ற திரவத்தையும் சாப்பிடுகின்றன. எறும்புகள் கடிக்கும்போது ‘பார்மிக்’ என்ற அமிலத்தையும் சுரக்கிறது.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

தேயிலைச் சுற்றுலா!

இலங்கை என்றதும் உலக நாடுகளுக்கு நினைவுக்கு வரும் விஷயங்களில் தேயிலையும் ஒன்று. விமான நிலையம் தொடங்கி, நகரங்களின் தெருக்கள் வரை தேயிலை கடைகள் அதிகம் இருக்கும். சுற்றுலா வரும் சீனர்களும் மற்ற நாட்டினரும், தேயிலையையும் நறுமணப் பொருள்களையும் வாங்கிச்செல்வர். அவர்களை கவர்வதற்காகவே, தேயிலைத் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு சுற்றுலா போல அழைத்துச்செல்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பால்பாய்ன்ட் பேனா

பால்பாய்ன்ட் பேனாவின் முனையில் ஒரு சின்னப் பந்து போன்ற உருளையானது, சுழலும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். அந்தப் பந்தின் மீது மை பட்டதும், சுழன்று மையை வெளிப்படுத்தும். இந்த நிகழ்வு தொடர்ந்து நடப்பதால்தான் நம்மால் எழுதமுடிகிறது. அதுபோலத்தான் ஜெல் பேனாவும். அதன் மை மட்டும் கொஞ்சம் தண்ணீராக இருக்கும்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஹைட்ரஜன் ரயில்!

சுற்றுச்சூழல் பாதுகாத்தலில் அதிக கவனம் செலுத்தும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அதற்காகப் பல்வேறு புதுமைகளைச் செய்கிறது. அவற்றில் ஒன்றாக, தண்ணீரை மூலப்பொருளாகப் பயன்படுத்தி இயங்கும் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ‘ஹைட்ரஜன் ரயில் சேவை’ என்ற பெயரில் இயங்குகிறது இந்த ரயில். சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, ரயில் செல்லும்போது ‘தடக் தடக்’ சத்தம் வராத வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதால், ஒலி மாசுபாடும் இல்லை என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கதை சொல்லும் ரயில் நிலையம்!

பிரான்ஸ் நாட்டின் ரயில்வே நிலையங்களில் கதைகள் வழங்கும் இயந்திரங்கள் பிரபலம். பயணிகள் ரயிலுக்காகக் காத்திருக்கும்போது, அந்த இயந்திரத்தில் தேவையான கதையைத் தேர்வுசெய்தால், பிரின்ட் செய்துகொடுக்கும். குழந்தைகள் கதைகள் முதல் எல்லாமே முற்றிலும் இலவசம்.