ராத்திரியில் நகத்தை வெட்டினால் தரித்திரம்!

- இப்போது போன்று அந்தக் காலத்தில் விளக்குகளோ, நகம் வெட்ட எளிய கருவிகளோ இல்லை. அதனால், மங்கிய வெளிச்சத்தில் வெட்டும்போது காயம் ஏற்படலாம்.

உச்சி வெயிலில் கிணத்துப் பக்கம் போனால், முனி அடிச்சிரும்!

- கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகின்றன. அவை அதீத வெயிலில் வெளிப்படும். அந்த நேரத்தில் சிறுவர்கள் சென்று, குளிக்க முற்படுவதை தடுக்க சொல்லப்பட்டது.

தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது!

- சமையல் விஷயத்தில் அதிகம் ஈடுபடுவது பெண்களே. தலைவிரி கோலமாக இருந்தால், முடி உதிர்ந்து விழும் வாய்ப்புண்டு.

தாழ்ப்பாளை ஆட்டினால் சண்டை வரும்.

- தொடர் இடைவெளியில் தாழ்ப்பாளை ஆட்டினால், தாழ்ப்பாளின் அச்சு உடையும். அதனால், ஏற்படும் செலவினால் வீட்டில் சண்டை நடக்கும்.

வடக்குல தலைவெச்சுப் படுத்தால், பித்தம் புடிச்சிரும்

- பூமியின் காந்த சக்தி, வட துருவத்தை நோக்கி நிற்கிறது. அதனால், நமது தலையையும் மூளையையும் தாக்கி, உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படலாம்.

புளியமரத்துக்குக் கீழே படுத்தால் பேய் அடிச்சுரும்!

- புளியமரம் இரவு நேரங்களில் அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடும். அங்கே படுத்து காற்றை சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

முருங்க மரம் வாசலில் இருந்தா வீட்டுக்கு ஆகாது

- மரங்களிலேயே மென்மையான முருங்கை. வீட்டுச் சிறுவர்கள் மேலே ஏறி விளையாடுகையில், கிளைகள் முறியலாம்.கம்பளிப்பூச்சிகளை எளிதில் ஈர்க்கும் திறன் கொண்டதால், பூச்சிகள் ஆபத்தானவை.

- ஓவியம்: சிவபாலன்