விண்வெளி துறையில் நாளுக்கு நாள் பல சாதனைகள் நடந்துவருகின்றன. அதேநேரம், விண்வெளி பற்றி சில தவறான செய்திகளும் உலாவுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், வேறு துறையில் சிறந்தவர்களும் இந்தத் தவறான தகவல்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதன் உண்மையுடன் சில சுவாரஸ்யமான தகவல்களையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்!

1. விண்வெளி பயணத்தில் இருக்கும் வீரர்கள், மாத்திரை வடிவிலேயே உணவைச் சாப்பிடுவார்கள் என்ற செய்தி ரொம்ப காலமாகவே சுற்றுகிறது. ‘ஐயோ பாவம் நம்ம விண்வெளி வீரர்கள்’ என்று நாமும் பரிதாபப்படுவோம். ஆனால், உண்மையே வேறு. அவர்கள் நம்மைவிட ருசியாகச் சாப்பிட்டவாறு விண்வெளியில் தங்கள் வேலையைச் செய்வார்கள். விண்வெளி வீரர்களுக்கு உணவு சமைப்பதற்காக நாசாவில் தனி துறையே உள்ளது. பீட்சா, பர்கர், ஃப்ரூட் சாலட், சிக்கன் வெரைட்டி என 200-க்கும் மேற்பட்ட உணவுகள் அவர்களின் மெனுவில் உள்ளன.

2. விண்வெளி என்றால், எங்கோ பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருப்பது என நினைக்கிறோம். உண்மையில், 100 கிலோமீட்டர் தொலைவிலேயே விண்வெளி ஆரம்பித்துவிடுகிறது. (என்ன ஒன்று, இந்த 100 கி.மீ.யை உங்கள் பைக்கிலோ, காரிலோ கடக்க முடியாது. ஹஹா...)

3. International Space Station (ISS) எனப் படித்திருப்பீர்கள். பூமியின் கடல் மட்டத்திலிருந்து ISS-ன் தொலைவு சராசரியாக 400 கி.மீ. மட்டுமே. அதாவது, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் இடையிலான தொலைவைவிடக் குறைவு.

4. பூமியிலிருந்து ராக்கெட்டில் கிளம்பினால் பல நாள்கள் பயணிக்க வேண்டியிருக்கும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சராசரியாக விண்வெளியை 1 முதல் 3 நிமிடத்துக்குள் அடைந்துவிடலாம்.

5. ஒலி பயணம் செய்ய, காற்றோ அல்லது வேறு ஊடகமோ தேவை. விண்வெளியில் காற்று இல்லை என்பதால், விண்வெளி நிலையத்துக்கு வெளியே விண்வெளி உடையின்றி நீங்கள் பேசுவது கேட்காது. விண்வெளி உடையினுள் காற்று மற்றும் ரேடியோ மைக் இருக்கும் என்பதால் அதைவைத்துப் பேச முடியும்.

6. விண்வெளியில் எப்போதும் அந்த உடையிலேதான் இருக்க வேண்டியிருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். விண்வெளி உடையின்றி ISS-க்கு வெளியே சில நிமிடம்கூட உயிர் வாழமுடியாதுதான். காரணம், அங்கு காற்றில்லை. ஆனால் ISS-க்கு உள்ளே நீங்கள் சாதாரண உடையில் உலா வரலாம்

7. அங்கு துணி துவைக்கும் வசதி இல்லை. எனவே, விண்வெளி வீரர்கள் சில வாரத்துக்கு ஒரே உடையையே அணிந்திருப்பார்கள். அங்குள்ள பொருள்களும் காற்றும் தூய்மையானது. அழுக்கோ, துர்நாற்றமோ ஏற்படாது. பழைய உடையைக் குப்பைக்கூடையில் போட்டுவிடுவார்கள்.

8. வீரர்கள் விண்வெளியில் எத்தனை நாள்களுக்கு இருக்கப்போகிறார்களோ, அத்தனை நாள்களுக்கும் உணவு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்பதும் தவறு. சில மாதங்களுக்கு ஒருமுறை பூமியிலிருந்து உணவு, பழங்கள், தண்ணீர், காற்று, புதிய உடைகள் ஆகியவை ISS-க்கு விண்கலம் மூலம் அனுப்புவார்கள். அவற்றை எடுத்துக்கொண்டு, தாங்கள் பயன்படுத்திய பொருள்களின் குப்பைகளை விண்கலத்தில் கொட்டி பூமிக்கு அனுப்பிவிடுவர். அது, வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வால் எந்தப் பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக எரிந்து சாம்பலாகிவிடும்.

9. ISS-ல் வெற்றிகரமாகத் தாவரங்கள், மீன்கள், எறும்புகள் முதலியவற்றைச் சோதனை முறையில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

10.சமீபமாக ISS-ல் நோய்த்தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக NASA தெரிவித்துள்ளது. இந்தக் கிருமிகள் பூமியிலிருந்து மனிதர்களுடன் விண்வெளிக்குச் சென்றதே என்கிறார்கள்.

11. அங்கு புவியீர்ப்பு இல்லை என்பதால் வீரர்களின் முதுகுத்தண்டுவட எலும்புகள் விரிவடையும், அதனால், எந்தச் சிறப்பு பானங்களும் குடிக்காமலே உயரம் ஆவார்கள்.

13. நம்மைப் போன்ற நாடுகள் KM, CM, Kilogram, Littre (S.I.Units) பயன்படுத்த அமெரிக்கா போன்ற சில நாடுகள் Mile, Inch, Pound, Gallon (Imperial Units) பயன்படுத்துகின்றன. ஒருமுறை ஐரோப்பாவின் விண்வெளி நிறுவனமான ESA-வும், அமெரிக்காவின் NASA-வும் கூட்டாக செவ்வாய்கிரகத்துக்கு விண்கலண் ஒன்றை அனுப்பியது. NASA used Imperial Units but EAS uses SI Units. இந்தக் குழப்பத்தினால் இரு நாட்டு விஞ்ஞானிகளும் விண்கலனை மாற்றி Program செய்துவிட்டனர். பல நூறு கோடி டாலர்கள் மதிப்புகொண்ட Mars Climate Orbiter விண்கலம், செவ்வாய்க்கிரகத்தில் தூள் தூளாக நொறுங்கியது.

14. சமீபத்தில் ISRO மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட மாணவர்களால் செய்யப்பட்ட காலாம்சாட்-2 என்ற செயற்கைக்கோள் 6 நாள்களில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. இதில் Antenna-வாக கட்டட வேலைகளுக்கான Measuring Tape பயன்படுத்தப்பட்டுள்ளது.

15. உலகில் முதன்முதலாகப் பெண்கள் மட்டுமே சேர்ந்து செய்த செயற்கைக்கோளின் பெயர் ‘மணியம்மையார் செயற்கைக்கோள்’. தஞ்சாவூரைச் சார்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இதை வடிவமைத்துள்ளனர். முதல்கட்டமாக, ஏப்ரல் இறுதியில் ஹீலியம் பலூன் மூலம் விண்வெளிக்கு அருகில் செலுத்தி சோதனை செய்துள்ளனர்.