கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம்தான். சேலம் ஸ்டார் ஸ்பெஷலில் மாம்பழம் இல்லாட்டி எப்படி? ஒரு மாந்தோப்பில் ஆரம்பிச்சு மாம்பழக் கடை வரை ரவுண்டு வரலாமா ஃப்ரெண்ட்ஸ்!

சேலம் அருகே மல்லூரில் உள்ள மாம்பழ விவசாயி அல்லிமுத்து, எங்களை மாம்பழத் தோப்புக்கு அழைத்துச் சென்றார். பசுமையான மரங்களும் மாங்கனிகளின் நறுமணமும் எங்களை வரவேற்றது. தோப்பை சுற்றிச் சுற்றி வந்தோம். கையருகே தொங்கும் மாங்காய்களைத் தொட்டு மோந்து பார்த்தோம். மாம்பழங்கள் குறித்து அல்லிமுத்து நிறைய பேசினார்.

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை
உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

‘‘சேலம் பகுதியில் 30 ரகங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. இமாம்பசந்த், மல்கோவா, அல்போன்சா போன்றவை மிகவும் புகழ்பெற்றவை. இதில் இமாம்பசந்த் என்ற வகை மாம்பழம் 10 நாள்கள் ஆனாலும் கெடாது. சென்னை, பெங்களூர் தொடங்கி தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் மரம் பூ விட ஆரம்பிக்கும். மார்ச் - ஏப்ரல் மாதங்களில் காய்கள் வளரும். மரத்திலிருந்து பழங்களை 110 நாள்களில் மகசூல் செய்யலாம். வருடத்துக்கு மூன்று மகசூல்.

ஒரு ஏக்கருக்கு 80 முதல் 90 மரங்களிலிருந்து சுமார் 40,000 மாம்பழங்கள் மகசூலாகும். எல்லா விவசாய விஷயங்கள் போல இதிலும் பல சவால்களைச் சந்தித்தே விளைவிக்கிறோம். மாம்பழங்களை தேன் உறுவல் என்னும் பூச்சியும் வெள்ளை ஈக்களும் சேதப்படுத்தும். மலைப் பக்கமாக இருக்கும் தோப்பு என்றால், குரங்குகள் வந்து சேதப்படுத்திவிடும். கவனமாகப் பார்த்துகொள்ள வேண்டும்.

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை
உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

மற்ற இடங்களைவிட சேலத்தில் மாம்பழங்கள் இனிப்பாக இருக்க இங்கிருக்கும் வெயிலின் அளவும் காரணம். தண்ணீரின் அளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும். நாங்கள் சொட்டு நீர்ப் பாசனம் முறையைக் கடைபிடிக்கிறோம். என் தோட்டத்தில் மரங்களுக்குச் செயற்கை உரங்கள் போடுவதில்லை. செயற்கை உரங்களில் உள்ள வேதிப் பொருள்கள் மண்ணின் தன்மையைச் சிதைத்துவிடும். இயற்கை உரமான மண்புழுக்களையும் குப்பைகளையும் மட்டுமே பயன்படுத்துகிறேன். அதேபோல பழங்களை பழுக்க வைக்க வைக்கோலைப் பயன்படுத்துகிறோம்.

நமது அரசு மாம்பழ விவசாயிகளுக்கு இவ்வளவு மரம் என்று தரும். அதை வைப்பதற்கான செலவையும் குழி தோண்டுவதற்கான செலவையும் கொடுக்கும். ‘வேளாண் செம்மல்’ உட்பட பல விருதுகளை நான் பெற்றுள்ளேன். விருதுகளைவிட என் தோட்டத்து மாம்பழத்தை உலகம் முழுக்க பலரும் சுவைக்கிறார்கள் என்பதே எனக்குப் பெருமை’’ என்று சுவையாக முடித்தார் அல்லிமுத்து.

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

சேலம் அக்ரஹாரம், சின்னக்கடை வீதியில் மாம்பழக் கடை வைத்திருப்பவர் கோபால். ‘‘நாங்கள் மூன்று தலைமுறைகளாக பழம் வியாபாரம் செய்துவருகிறோம். மாம்பழ சீசன் வந்துவிட்டாலே தனி சந்தோஷம் வந்துவிடும். வாரகம்பாடி, அல்போன்சா, நடுசாலி, மல்கோவா, இமாம் எனப் பல்வேறு வகை மாம்பழங்களை மொத்தமாகவும் சில்லறை விலையிலும் விற்கிறோம். மார்ச் முதல் ஜூன் வரை நான்கு மாதங்களுக்கு நல்ல வியாபாரம் இருக்கும். நான்கு மாதத்துக்குப் பிறகு ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாச்சி, ஆரஞ்சு என விற்போம்’’ என்றார்.

ஆளுக்கு ஒரு பழத்தை சுவைத்தவாறு கிளம்பினோம்!

 சுட்டி டீம், புகைப்படங்கள்: க.தனசேகர், செ.பிரபாகரன்