கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சேலம் ஸ்பெஷல்!

சேலம் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
News
சேலம் ஸ்பெஷல்!

கே.பவித்ரா தேவி, ச.வினோத்குமார், சூ.மா.அகல்யா, சே.நவநீதன்

சேலம் ஸ்பெஷல்!
சேலம் ஸ்பெஷல்!

சேலத்தின் ஸ்டார்கள்!

சேலம் ஸ்பெஷல்!

எங்க சேலம் பல தலைவர்களையும் ஸ்டார்களையும் கொடுத்திருக்கு. சாம்பிளுக்கு சிலர்...

●1926 முதல் 1930 வரை அன்றைய சென்னை ராஜதானி முதல்வராக இருந்த பி.சுப்பராயன்.

●சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மூதறிஞர் ராஜாஜி.

●ஆங்கிலேயரை    எதிர்த்து போராடிய வீரத்தின் விளைநிலம், தீரன் சின்னமலை.

●பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தங்க மாரியப்பன்.

பம்பை உடுக்கை

சேலம் ஸ்பெஷல்!

பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று, பம்பை உடுக்கை. இதன் தயாரிப்பில், சேலம் மாவட்டத்தின் முத்துநாயக்கன்பட்டி சிறப்பு பெற்றது. திம்மி என்ற நீள்வட்ட கருவியுடன் சேர்ந்ததாக பம்பை வாசிக்கப்படுகிறது. கோயில் திருவிழாக்களில் வாசிக்கப்படும் பம்பையின் சிறப்பே அதிலிருந்து எழும்பும் ஒலிதான். இந்தக் கருவிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து முத்துநாயக்கன்பட்டிக்கு நிறைய ஆர்டர்கள் வரும். தோல் இசைக் கருவியான பம்பையின் தயாரிப்புக்கு ஆட்டுத் தோல் பயன்படுத்தப்படுகிறது.

நேரு கலையரங்கம்!

சேலம் ஸ்பெஷல்!

சேலம் பழைய பேருந்து நிலையம், போஸ் மைதானம் அருகே இருக்கும் புகழ்பெற்ற கட்டடம் நேரு கலையரங்கம். 1961-ஆம் ஆண்டில் அன்றைய காங்கிரஸ் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1964-ல் காங்கிரஸ் அமைச்சர் மஜீத் என்பவரால் திறந்தவெளி கலையரங்கமாகத் திறக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டில் முழு கலையரங்கமாக மாறியது. எத்தனையோ முதல்வர்கள், பிரதமர்கள், பிரபலங்கள் வந்துசென்ற இடம் இந்த நேரு கலையரங்கம்.

ஜல் ஜல் கொலுசு!

சேலம் ஸ்பெஷல்!

மகாராஷ்ட்ரா, குஜராத், உத்ரபிரதேசம் போன்ற இடங்களிலும் கொலுசு தயாரிக்கப்பட்டாலும், சேலம் கொலுசுக்கு தனி மவுசு உண்டு. சேலத்தின் செவ்வாய்ப்பேட்டை பகுதி, கொலுசு தயாரிப்புக்குப் புகழ்பெற்றது. கேரளா, ஆந்திரா, பம்பாய் மாடல் எனப் பல வகைகளில் சேலத்தில் கொலுசு தயாரிக்கப்படுகிறது.

சின்ன வேடந்தாங்கல்!

சேலம் ஸ்பெஷல்!

சேலம் கன்னங்குறிச்சியிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மூக்கனேரி ஏரி. பல்வேறு நாடுகளிலிருந்து 140 வகையான பறவைகள் இங்கே வருகின்றன. எனவே, இந்த இடத்தை ‘சின்ன வேடந்தாங்கல்’ என்கிறார்கள். முன்பு, பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்து ஏரி இருப்பதே தெரியாமல் இருந்தது. இப்போது சுத்தம் செய்து, சுற்றுலா பகுதியாக மாற்றியிருக்கிறார்கள். சேலம் பக்கம் வந்தால் இங்கே ஒரு விசிட் வாங்க நண்பர்களே!