கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சரியான மொழி

சரியான மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
சரியான மொழி

சே.நவநீதன் ஓவியங்கள்: ஜெயசூர்யா

சரியான மொழி

நாலு பேர் இருக்கிற இடத்துல ரெண்டு வார்த்தையைச் சொன்னாலே, நாலாவது ஆள்கிட்ட வரும்போது, அது முன்னே பின்னே மாறியிருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னாடி சொல்லப்பட்ட பழமொழி சும்மா இருக்குமா? நிறைய மாறி, அர்த்தமும் மாறியிருக்கு. அப்படி ஒரு ரெண்டு பார்ப்போம்!

காகம் கரைந்தால் விருந்தாளி வருவாங்க!

சரியான மொழி

முன்காலத்தில் கடல் வணிகமே பெரிதாக இருந்தது. அப்போது திசைக்காட்டியும் இல்லை. திசையை அறிய காக்கையைக் கூண்டில் வைத்திருப்பார்கள்.  புயல், பேரலை போன்றவற்றை கடந்ததும், திசையை அறிய காக்கையைப் பறக்கவிடுவார்கள். அது கரையை நோக்கி வரும். கரையில் இருப்பவர்கள், கப்பலில் மக்கள் கரையை நோக்கி வருகிறார்கள் எனப் புரிந்துகொள்வார்கள். இதுவே, பின்னாளில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்றாகிவிட்டது.

சரியான மொழி
சரியான மொழி

ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்

இதுவே, ‘யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்’ என்றாகிவிட்டது. ஆ என்றால் ஆவினம். பசுவின் பாலிலிருந்து கிடைக்கும் நெய்யை, இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பொலிவு ஏற்படும். பூ நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்தத் தேனை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு பலம். இதை உணர்த்தவே, ‘ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால், பூ நெய்க்கு ஒரு காலம் வரும்’ என்றார்கள்.