
செல்லமான பூனையார்

உங்க வீட்டுச் செல்லப் பூனையை கோடைக்காலத்தில் எப்படிக் கவனிச்சுக்கணும்?
சூடான உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உணவை ஆறவிட்டு கொடுப்பது உடல் வெப்பத்தை தடுக்கும்.
ஈரமான துண்டு வைத்து பூனையின் உடலை துவட்டுவதன் மூலம் உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கலாம்.
தினமும் குளிப்பாட்டி நோய்த்தொற்று இல்லாமல் பார்த்துக்கணும்.
குளிர்ந்த நீரை பூனை எப்போதும் சுலபமா குடிக்கும் இடத்தில் வைக்கணும். அந்தத் தண்ணீர் சுத்தமா இருப்பது முக்கியம்.

ஓர் இடத்தில மட்டும் வைக்காமல் இரண்டு மூன்று இடங்களில் தண்ணீர்ப் பாத்திரத்தை வைக்கணும்.
வெளிர் நிறப் பூனைகள், மற்ற பூனைகளைவிடக் கோடை வெயிலால் அதிகம் பாதிப்படையும். அவற்றை அதிகம் வெயிலில் நடமாடாமல் பார்த்துக்கங்க.
பூனை ஓய்வெடுக்கும் இடம், சூரிய ஒளி நேரடியாக விழாத, நிழல் நிறைந்த பகுதியாக இருக்கட்டும்.
பூனையின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுங்கள்.
அதிகாலையிலும் மாலையிலும் மட்டுமே வெளியில் விளையாட அனுமதிங்க.

சாப்பாடு செரிக்காமல் வாந்தி எடுப்பது பெரிய பிரச்னை. தாமதிக்காமல் மருத்துவம் பாருங்கள்.
ஷாப்பிங் சென்ற இடத்தில் காருக்குள்ளேயே விட்டுப்போவது ரொம்ப தப்பு.
பூனை ஓய்வெடுக்கும் இருப்பிடத்தை தரையைவிடக் கொஞ்சம் உயரமா தேர்ந்தெடுப்பது நல்லது.
கோடைக்காலத்தில் உடலிலிருந்து முடி உதிர்வது அதிகமா இருக்கும். அந்த முடிகளை கவனமா சுத்தப்படுத்தணும்.

குளிர்ந்த காற்று பூனைக்கு நல்லது. அதற்கான வசதியைச் செய்துகொடுங்க.
குளிர்ந்த நீரையும் அவ்வப்போது ஸ்ப்ரே பண்ணலாம்.
உடலில் அளவுக்கு அதிகமான முடி இருந்தால், அவ்வப்போது சீராக்க வேண்டும்.
-ச.முத்துகிருஷ்ணன்