கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

விளக்கம்: ஊட்டச்சத்து நிபுணர் அபிராமி
தொகுப்பு: கிராபியென் ப்ளாக்

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!
ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

ந்தப் பழத்தில் என்ன கிடைக்கும்? வாங்க, அவங்களே சொல்றதை கேட்போம்!

ஆப்பிள்

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க காரணமான என்கிட்ட `பெக்டின்’ (Pectin) நார்ச்சத்து இருக்கு. நான் உங்க உடம்புல தண்ணியுடன் கலந்து நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வெச்சு, கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பேன். செரிமானத்துக்கு உதவுவேன்.

ஆரஞ்சு

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

கலர்ல மட்டுமல்லே, சத்து விஷயத்திலும் அசத்தும் என்னைச் சாப்பிட்டீங்கன்னா, `வைட்டமின் சி’ சத்து நிறைய கிடைக்கும். அடிக்கடி சளி, ஜுரம் வந்து அவஸ்தைப்படறவங்களுக்கு நோய் எதிர்ப்புசக்தியைக் கொடுத்து வலிமையாக்குவேன்.

ஸ்ட்ராபெர்ரி

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

பார்த்ததுமே கவரும் அழகும் சுவையும் என்னுடையது. அதோடு, நிறைய வைட்டமின்களும் மினரல் சத்துகளும் வெச்சிருக்கேன். குறிப்பாக, `ஒமேகா 3’ என்ற கொழுப்பு அமிலம் உங்க மூளை வளர்ச்சிக்கு உதவும். என் விதைகளை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

மலை வாழை

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

சும்மாவே ஓடியாடி விளையாடும் நீங்க லீவுல வேற இருக்கீங்க. நிறைய எனர்ஜி தேவை. விளையாடப் போறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி என்னைச் சாப்பிட்டால் உடம்பையும் மூளையையும் சுறுசுறுப்பா மாற்றுவேன். என்னில் சின்ன சைஸாப் பார்த்து வாங்குங்க. அதுதான் நல்லது.

எலுமிச்சை

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

சம்மர்ல உடம்புல இருக்கும் ஆற்றல் புஸ்ஸ்ஸ்னு இறங்கும். வெளியே போய் வந்ததும், முகம் மற்றும் கை, கால்களை கழுவிட்டு என்னை ஜூஸாக்கி  குடிச்சீங்கன்னா புத்துணர்ச்சி கிடைக்கும். வைட்டமின் சி, `பெக்டின்’ (Pectin) நார்ச்சத்து இருக்கிறதால உங்களை உறுதியா வெச்சுப்பேன்.

திராட்சை

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

என்கிட்ட குறைந்தளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low glycemic index) கொண்ட கார்போஹைட்ரேட்  இருக்கிறதால, உங்க ரத்தத்துல மெதுவா கலந்து, ரொம்ப நாள் தங்கியிருந்து அதிகமான ஆற்றலையும் தருவேன்.

அன்னாசி

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

என்கிட்ட ப்ரூமெலைன் (Bromelain) என்ற நொதி இருக்கு. இது, உங்க சருமத்தைப் பாதுகாக்கும். என்கிட்ட இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் மூலம் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பேன். வாரத்துல மூணு நாள் என்னைச் சாப்பிடுங்க.

பீச்

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

நான்தான் பீச் ஃப்ரூட். என்கிட்ட `பீட்டா கரோட்டீன்’ (Beta carotene) இருக்கு. சாப்பிட்டவுடனே உங்க உடம்புல வைட்டமின் ‘ஏ’ சத்தா மாறிடுவேன். உங்க கண்களைப் பாதுகாப்பேன். மறக்காம என்னை வாங்கிச் சாப்பிடுங்க.

பேரிக்காய்

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

மற்ற பழங்கள் மாதிரி என்கிட்ட அதிகமா சர்க்கரை கிடையாது. கொஞ்சமாதான் இனிப்பேன். ஆனால், வைட்டமின், மினரல்னு நிறைய சத்துகள் வெச்சிருக்கேன். குறைஞ்ச கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள கார்போஹைட்ரேட், உங்களை வலிமையாக்கும். பொட்டாசியம் சத்து உங்க இதயத்தைப் பாதுகாக்கும்.

அவகோடா

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!

என்னை `பட்டர் ஃப்ரூட்’னும் சொல்வாங்க. என்னை நேரடியா சாப்பிட முடியாது. சர்க்கரை, பால் சேர்த்து ஜூஸ் போட்டுத்தான் குடிக்கணும். என்கிட்ட `ஒமேகா 3’ கொழுப்பு அமிலமும் `வைட்டமின் சி’ சத்தும் இருக்கு. உங்க இதயத்தைப் பாதுகாப்பேன்.

பழங்களின் நன்மை குறித்த வீடியோ காண...

ஹலோ ஃப்ரூட்ஸ் ஸ்பீக்கிங்!