கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

வெல்வோம் வா!

வெல்வோம் வா!
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்வோம் வா!

வெல்வோம் வா!

வெல்வோம் வா!

‘‘நான் இந்த கேமில் இத்தனை லெவல் தாண்டிட்டேன்’’ எனப் பேசிக்கொள்வது இப்போது ஃபேஷன். அதேநேரம், ஸ்மார்ட்போனைத் தொட்டாலே கேடு என்பதாக ஒரு பயமுறுத்தும் கருத்தும் இருக்கிறது. எது சரி? ஸ்மார்ட்போன் கேம் விளையாட்டின் நன்மை, தீமைகளைப் பாருங்க. இதைவெச்சு நீங்களே ஒரு கட்டுப்பாட்டுக்கு வாங்க!

வெல்வோம் வா!

நன்மைகள்

1. ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யலாம். எனவே, கல்வி/அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடும்போது கற்றல் மேம்படுகிறது.

2. ஒரு செயலுக்கு உடனடி பதில் அளிக்க பயிற்சி கிடைக்கிறது.

3. முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது.

4. டொபமைன் (Dopamine) என்ற ஹார்மோன் வெளிப்படுகிறது. கற்றலுக்கான ஆற்றல் இது.

5. அறிவாற்றலும் திட்டமிடல் திறனும் மேம்படுகிறது.

தீமைகள்

1. அடிக்கடி விளையாடுவதால் முரட்டுத்தனம் அதிகரிக்கிறது. பல நேரங்களில் விளையாடி முடித்தும் அதே மனநிலை தொடர்கிறது.

2. உணர்வுப் பூர்வமான மற்றும் வெளி விஷயங்களில் பங்கேற்பது பாதிக்கிறது.

வெல்வோம் வா!

3. வெற்றிபெற பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கின்றன.

4. முரட்டுத்தனமான எண்ணங்கள் அதிகரிக்கின்றன.

5. நம்முடைய இயல்பான உணர்வுகளை மாற்றுகிறது.

6. ஒரே இடத்தில் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.

7. ஒளியுணர்வு குறைபாடு, வலிப்பு போன்றவையும் ஏற்படலாம்.

8. விளையாடியே ஆக வேண்டும் என்ற அடிமைத்தனம் உண்டாகிறது.

வெல்வோம் வா!

கொசுறு தகவல்:

மூளையில் குறிப்பிட்ட பகுதி பரிசு மற்று தொடர் விளையாட்டுக்குக் காரணமாக உள்ளது. அது, பெண்களைவிட ஆண்களின் மூளையில் அதிகமாக இயங்குகிறது. எனவேதான், பெண்களைவிட அதிக ஆண்கள் வீடியோ கேம் விளையாடுகிறார்கள்.

- சஞ்சனா