Published:Updated:

நாமும் போடலாம் பட்ஜெட்!

நாமும் போடலாம் பட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
நாமும் போடலாம் பட்ஜெட்!

நாமும் போடலாம் பட்ஜெட்!

நாமும் போடலாம் பட்ஜெட்!

நாமும் போடலாம் பட்ஜெட்!

Published:Updated:
நாமும் போடலாம் பட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
நாமும் போடலாம் பட்ஜெட்!

ட்ஜெட் போடுவது, சேமிப்பது இதெல்லாம் பெரியவங்க விஷயம் மட்டுமில்லே ஃப்ரெண்ட்ஸ், நாமளும் பாக்கெட் மணியில் சேமிக்கலாம். அதைவெச்சு பட்ஜெட் போடலாம். இதை எடுத்துச் சொல்லி, விழிப்பு உணர்வை உருவாக்க, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நிதி மேலாண்மை பயிற்சி வகுப்பினை ‘ஐ தாட் அட்வைஸரி’ நிறுவனம், சென்னையில் நடத்தியது.

நாமும் போடலாம் பட்ஜெட்!

இதில் கலந்துகொண்ட சிறுவர்கள், நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால், முக்கிய தேவை அடிப்படையில் எப்படிப் பிரித்து செலவழிப்பீர்கள், எப்படிச் சேமிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு சுட்டிகள் தங்களுக்குள்  விவாதித்து பதில் அளித்தது அருமை.  அந்தப் பதிலிருந்து, ஒரு பொருளை வாங்குவது குறித்த விருப்பம் மற்றும் தேவை இரண்டுக்குமான வித்தியாசத்தைப் பயிற்சியாளர் புரியவைத்தார்.
 
பணம் என்றால் என்ன, அதன் தேவை என்ன, பணத்தை எப்படிச் சேமிக்கலாம், செலவழிக்கலாம், கஷ்டப்படும் நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது எனப் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாமும் போடலாம் பட்ஜெட்!

அடுத்ததாக, கடந்த ஒரு வாரத்தில் பெற்றோரிடம் எதற்கெல்லாம் பணம் வாங்கினீர்கள், அதற்கு என்ன பட்ஜெட் போட்டீர்கள், எவ்வளவு செலவழித்தீர்கள் என்ற விவரங்கள் அடங்கிய  படிவம் தரப்பட்டது. சுட்டிகள்  உற்சாகத்துடன் அதைப் பூர்த்தி செய்தார்கள். அவற்றில் பல செலவுகள், பட்ஜெட்டைவிட அதிகமாக இருந்தன. பணத்தை எந்த நோக்கத்துக்காகச் சேமிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மேற்படிப்புக்கு, சுற்றுலா செல்ல, இசைக்கருவி வாங்க என வித விதமான பதில்களைத் தந்தனர்.

நாமும் போடலாம் பட்ஜெட்!

இந்தப் பயிற்சி வகுப்பில் இறுதியாக, ஒரு குறும்படம் திரையிடப்பட்டது. ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் கதை. இளைஞர்களால் `முட்டாள்’ எனக் கிண்டலடிக்கப்படும் ஒருவர், நிதிச் சேமிப்பு மற்றும் முதலீட்டில் சிறப்பாகச் செயல்பட்டு, ரூ.100 கோடிக்கு அதிபதியாகி ஆகிறார். அவரைக் கிண்டலடித்தவர்கள் தலைகுனிய, அவர்களுக்குப் பணத்தைப் பெருக்குவது குறித்து வாரன் பஃபெட் கூறியதை விளக்குகிறார்.

ஒரு கதைக்குள், நிதி மேலாண்மை குறித்த பாடத்தைப் புகுத்தியிருக்கும் அந்தக் குறும்படத்தை, சிறுவர்கள் ரசித்துப் பார்த்தார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சேமிப்பின் அவசியம், சேமித்த பணத்தை முதலீடாக மாற்றி கூடுதல் வருமானம் ஈட்டுவது குறித்த அறிந்துகொண்டோம் என சிறுவர்கள் உற்சாகமாகக் கூறினார்கள்.

-தெ.சு.கவுதமன்,  புகைப்படம்: சொ.பாலசுப்பிரமணியன்