Published:Updated:

கேக் இளவரசி வினுஷா!

கேக் இளவரசி வினுஷா!
பிரீமியம் ஸ்டோரி
News
கேக் இளவரசி வினுஷா!

கேக் இளவரசி வினுஷா!

“கேக் செய்றது எவ்ளோ இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும் தெரியுமா? டோரா கேக், ஸ்பைடர்மேன் கேக் தயாரிக்கிறது என் ஸ்பெஷல்’’ என்கிறார் பிசினஸ் சுட்டி வினுஷா.

கேக் இளவரசி வினுஷா!

“குக்கிங்தான் எனக்கு ஹாபி. ‘மனசும் கையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சாப்பாடு ருசியா இருக்கும்’னு அம்மா சொல்வாங்க. ஸ்கூல் லீவு நாள்களில் ஆன்லைனில் விதவிதமான சமையல் வீடியோக்கள் பார்ப்பேன். அம்மாவுடன் சேர்ந்து சமையலில் ஹெல்ப் பண்ணுவேன். இந்த வயசில் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கும்போது எதுக்கு சமையலைக் கத்துக்கறேன்னு நிறைய பேர் கேட்கறாங்க. விளையாட்டு, இசை, கிராஃப்ட் மாதிரி சமையலும் ஒரு கலைதானே’’ என க்யூட் குரலில் கேட்கிறார் வினுஷா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கேக் இளவரசி வினுஷா!

நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் சமையல் இளவரசியின் அம்மா கவிதா, ‘‘கேக் ஷாப்களுக்குப் போகும்போது செஃப்களை தேடிப்பிடிச்சு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுப்பா. ஆறு வயசில் பேக்கிங் சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சுட்டா. ஒருமுறை வினுஷா செய்த குக்கரி கேக்கை சாப்பிட்ட என் ஃப்ரெண்ட்ஸ் பாராட்டினாங்க. அவள் ஆர்வத்தை பார்த்து பேக்கிங் க்ளாஸ் சேர்த்துவிட்டோம். ஆறு மாசத்தில் பேஸிக் கோர்ஸ்களை கத்துக்கிட்டு வீட்டிலேயே கேக் பேக்கிங் செய்ய ஆரம்பிச்சுட்டா” என்கிறார் பெருமையுடன்.

கேக் இளவரசி வினுஷா!

“ஆரம்பத்தில் கப் கேக், குக்கரி கேக் எனச் செய்ய ஆரம்பிச்சேன். பெரிய அளவிலான க்ரீம் கேக்குகள் செய்ய நிறைய அனுபவம் தேவைன்னு மாஸ்டர் சொல்வார். க்ரீம் கேக்குகள் செய்ய கலரிங், சர்க்கரை, டெக்கரேஷன்னு எல்லா விஷயங்களிலும் கவனமா இருக்கணும். என் ஏழாவது பிறந்தநாளுக்கு, கேக் வெளிய ஆர்டர் பண்ண வேண்டாம், நானே பண்றேன்னு சொன்னேன். முதல் க்ரீம் கேக் என்பதால் டிசைன் நினைச்ச அளவுக்கு வரலை. ஆனாலும் நான் பண்ணின கேக் என்ற சந்தோஷம் இருந்துச்சு. அதைச் சாப்பிட்ட எல்லாரும், ‘வாவ் சூப்பர் டேஸ்ட்’னு என்கரேஜ் பண்ணினாங்க.

கேக் இளவரசி வினுஷா!

அடுத்தடுத்த முறை தொடர்ந்து செஞ்சு, தெளிவா கத்துக்கிட்டதும், என் ஃப்ரெண்ட் பர்த்டேவுக்கு மினியன் கேக் செய்து கிஃப்ட் பண்ணினேன். அப்பாவின் ஃப்ரெண்ட்ஸ் வீடுகளில் எனக்கு கேக் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

கேக் இளவரசி வினுஷா!

என்கிட்ட சின்ன அளவிலான பேக்கிங் பொருள்கள்தான் இருக்கு. அதிகபட்சம் மூன்று கிலோ வரையிலான கேக் ரெடி பண்ணுவேன். இப்போ வரை 60 கேக் ஆர்டர்கள் முடிச்சிருக்கேன். எதிர்காலத்தில் ஒரு கேக் ஷாப் ஆரம்பிச்சு, அதை நம்பர் ஒன் ஆக்கணும்’’ என இனிப்புடன் புன்னகைக்கிறார் வினுஷா.

-சு.சூர்யா கோமதி, படங்கள்: பா.காளிமுத்து

வினுஷாவுக்கு விஷ் பண்ணுங்க சுட்டீஸ்!

கேக் இளவரசி வினுஷா!

கேக் (Cake) என்ற சொல்லுக்குத் தமிழில், ‘அணிச்சல்’ என்று பெயர்.