குரங்குகளைப் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு குஷி பிறந்துடும். அது சேட்டை பண்ணுதோ இல்லையோ, அதைப் பார்த்து பலரும் சேட்டை பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அந்தக் குரங்குகள் பற்றி சில க்யூட்டான விஷயங்களைச் சொல்கிறார் இயற்கை ஆர்வலர், ரவீந்திரன் நடராஜன்...

பழைமை உலகக் குரங்குகள் (ஆசிய கண்டத்திலும், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் வாழ்பவை), நவீன உலகக் குரங்குகள் (தென் அமெரிக்காவில் வாழ்பவை) என இரண்டு வகையாகப் பிரிப்பாங்க.

குரங்கு எனச் சொன்னதும் வாழைப்பழம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனா, குரங்கு ஓர் அனைத்துண்ணி. பழங்கள், இலைகள், மரங்கள், முட்டைகள், பூச்சிகள் என எதையும் விட்டுவைக்காது.

சிங்கவால் குரங்குகளின் வால், அதன் உருவத்தைவிட இரண்டு மடங்கு பெரிசா இருக்கும்.

உலகில் இதுவரை 264 குரங்கின வகைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடைசியாக 2007ல் காங்கோ காடுகளில் புதியதாக ஒரு குரங்கு வகையைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

அதிக எடைகொண்டது, ‘மன்றில் குரங்கு’. 35 கிலோ வரை இருக்கும். இதன் முகங்களில் வண்ணமயமான வரிகள் இருக்கும்.

உலகத்தில் ஒரு குரங்கு மட்டும் இரவாடியாக இருக்கு. அதன் பெயர், ஆந்தைக் குரங்கு (owl monkey). அமேசான் காட்டுக்குப் போனால் மீட் பண்ணலாம்.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க. அதன் சரியான பொருள், ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இனத்தின் மூதாதையர்களும் ஒன்றாக இருந்து பிரிந்தவர்கள்.

மனிதர்களின் ஆராய்ச்சிக்கு அதிகம் பலியாவது குரங்குகள்தான். இதுவரை 55 லட்சத்துக்கும் மேலான குரங்குகளை மருத்துவப் பரிசோதனைக்காகப் பயன்படுத்தி இருக்காங்க. 2005 முதல் இதுமாதிரியான பரிசோதனைக்குத் தடை போடப்பட்டிருக்கு.

குரங்குகளின் ஆயுட்காலம் 10 வருடங்களிலிருந்து 50 வருடங்கள் வரை வகையைப் பொருத்து மாறுபடும்.

குரங்குகளுக்கு வாலின் நுனி வரை தொடு உணர்ச்சி இருக்கும். அதன் மூளை மற்றும் முதுகுத்தண்டின் நீட்சிதான், வால். மூளையின் கட்டுப்படுத்தும் செயல், வால் நுனி வரை இருக்கும். இதைத்தான் சிலர் குரங்குக்கு ரெண்டு மூளைன்னு கிளப்பிவிட்டிருக்காங்க.

உலகிலேயே பிரேசில் நாட்டில்தான் குரங்குகள் அதிகம் இருக்கின்றன.

குரங்குகள் இயல்பாகவே புத்திசாலிகள். அதிலும், காபூச்சின் என்ற குரங்குகள் மிகவும் புத்திசாலி. நாடகங்கள், சர்க்கஸ்களில் பயன்படுத்துவாங்க. இசைக்கருவி வாசிப்பது, கற்கும் திறனும் இயல்பாக இருக்கும்.

ஹோவ்லர் என்ற குரங்கின் ஒலி எழுப்பும் திறன் 4 கிலோமீட்டர் வரை கேட்கும்.

உலகிலேயே மிகச்சிறிய குரங்கு, ‘பிக்மி மாரமோசெட்’. இதன் எடை 140 கிராம். 6 அங்குலம் மட்டுமே வளரும்.

-ரா.கௌசல்யா