Published:Updated:

பட பட பட்டாம்பூச்சிகள்

பட பட பட்டாம்பூச்சிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பட பட பட்டாம்பூச்சிகள்

பட பட பட்டாம்பூச்சிகள்

தோட்டத்தில் கலர் கலராகப் பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் பார்த்ததுமே மனசு உற்சாகமாகிடும். நம் பகுதியில் இருக்கும் சிலவற்றின் பெயர்களைத் தெரிஞ்சுக்கிட்டா, அடுத்த முறை நண்பர்களிடம் பெயரைச் சொல்லி காண்பிக்கலாமே.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப் பெயர்: Tawny coster

அறிவியல் பெயர்: அக்ரேயா டெர்பிசிகோர் (Acraea terpsicore)

தமிழ்ப் பெயர்: செவ்வந்தி சிறகன்

53-64 மில்லிமீட்டர்கொண்ட மிகச்சிறிய பட்டாம்பூச்சி. புல்வெளிகள் மற்றும் சுற்றுப்புறத்தில் அதிகம் காணப்படும். தரைமட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரம் வரையே பறக்கும். 20 முதல் 100 வரையிலான முட்டைகளை இடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப் பெயர்: Common jezebel

அறிவியல் பெயர்: டெயிலிஸ் யூகாரீஸ் (Delias eucharis)

தமிழ்ப் பெயர்: மஞ்சள் அழகி

மஞ்சள், கறுப்பு, வெள்ளை, ஆரஞ்சு கலவையில் ஜொலிக்கும். அடர்ந்த காடுகளிலும் சமவெளிகளிலும் காணப்படும். 7,000 அடி உயரத்திலும் வாழக்கூடியது. ஒரு சில நேரங்களில் தோட்டங்களிலும் திறந்தவெளியிலும் இரைதேடி அலையும்.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப் பெயர்: Lemon pansy

அறிவியல் பெயர்: ஜூனோனியா லெமோனஸ் (Junonia lemonias)

தமிழ்ப் பெயர்: பழுப்பு வசீகரன்

தோட்டம், தரிசு நிலம் மற்றும் வனப் பகுதிகளில் காணப்படும். பழுப்பு நிற இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளியும், உடம்பின் மத்தியில் ஆரஞ்சு நிற வளையமும் காணப்படும். தரையையொட்டியே பறப்பதால் அனைத்து இடங்களிலும் தென்படும்.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப் பெயர்: Blue tiger

அறிவியல் பெயர்: திருமலை லிமினிஸ் (Tirumala limniace)

தமிழ்ப் பெயர்: நீல வரியன்

அதிக தூரம் இடம்பெயரும் இயல்புகொண்டவை. இந்தியாவில் இவற்றின் இடம்பெயர்தல் அதிகமாக நடைபெறுகிறது. சிறகின் மேற்புறத்தில் கருமை நிறத்துடன் நீல நிறப் புள்ளிகள் இருக்கும்.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப்பெயர்: Striped tiger

அறிவியல் பெயர்: டேனஸ் ஜெனுட்டியா (Danaus genutia)

தமிழ்ப் பெயர்: ஆரஞ்சு வரியன்

72 -100 மில்லிமீட்டர் வரை இருக்கும் இந்த ஆரஞ்சு வரியன்கள், ஆண்டு முழுவதும் தென்படும். ஆரஞ்சு நிறத்துடன் வெள்ளை நிறப்பட்டைகள் இதன் சிறகுகளின் ஓரத்தில் காணப்படுவது இன்னும் அழகு.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப்பெயர்: Common crow

அறிவியல் பெயர்: யூபிலா கோர் (Euploea coree)

தமிழ்ப் பெயர்: வெண்புள்ளி கறுப்பன்

85-95 மில்லிமீட்டர் உடைய இவை, கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் வரை பறக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தெற்கு பாகிஸ்தான், மியான்மர், ரஷ்யா, பங்களாதேஷ் போன்ற இடங்களில் இதன் வலசைப் பயணம் அதிகம் நடக்கும்.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப் பெயர்: Plain tiger

அறிவியல் பெயர்: டனஸ் ஜெனிடியா (Danaus chrysippus)

தமிழ்ப் பெயர்: வெந்தய வரியன்

நமது சுற்றுப்புறங்களில் சாதாரணமாக காணப்படும் பட்டாம்பூச்சி இனம். தோட்டங்களிலும் காடுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன.

பட பட பட்டாம்பூச்சிகள்

ஆங்கிலப் பெயர்: Common emigrant

அறிவியல் பெயர்: கேடோஸ்பிலியா போமோனா (Catopsilia Pomona)

தமிழ்ப் பெயர்: கொன்னை வெள்ளையன்

வலசை செல்லும் பட்டாம்பூச்சிகள். சல்பர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால், செடிகளுடன் ஒத்து காணப்படும். இந்தத் தகவமைப்பின் மூலம் எதிரிகளிடமிருந்து எளிதாகத் தப்பித்துவிடும்.

- ரா.கௌசல்யா, படங்கள்: ஆ.வள்ளி சௌத்ரி