Published:Updated:

நம்ம ஊரு பறவைகள்!

நம்ம ஊரு பறவைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம்ம ஊரு பறவைகள்!

படங்கள்: வின்சிலின் வின்சென்ட்

நம்ம ஊரு பறவைகள்!

றவைகளின் வாழ்க்கைமுறை சுவாரஸ்யமானது. நாம் எளிதாகப் பார்க்கக்கூடிய சில பறவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். இவற்றை உங்கள் வீடுகளைச் சுற்றியும் பார்க்க முயலுங்கள்.

சிவப்புச் சில்லை (Red Munia)

நம்ம ஊரு பறவைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிட்டுக்குருவி அளவே இருக்கும்.  வெட்டவெளிக் காடுகள், புல்வெளிக் காடுகள்,  புதர்கள் என ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வசிக்கும். இதன் அழகான தோற்றத்தைப் பார்த்து வெளிநாட்டுப் பறவை என நினைக்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த இதை சென்னையின் சுற்றுப்புற நீர்நிலைகளிலேயே பார்க்கலாம். இதன் பொதுப் பெயர், அவதாவாத். அஹமதாபாத்திலிருந்து செல்லப்பிராணிகள் வணிகத்தில் பல ஆண்டுகளாக இவை ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தப் பெயர்.  விதைகள், பூச்சிகள், கரையான்களை உட்கொள்கின்றன.

பனங்காடை  (Indian Roller)

நம்ம ஊரு பறவைகள்!

மிழகத்தில் பரவலாகக் காணப்படும் பறவை. மேற்கு ஆசியாவிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் வரை வாழ்கின்றன. ஆண் பனங்காடைகள் அழகுக்குப் பெயர்போனது. திறந்தவெளிப் புல்வெளிக் காடுகள்,  இவற்றின் வாழிடம். கிராமப் பகுதிகளின் விவசாய நிலங்களில், சாலையோர மரங்களில் காணலாம். வண்டு, வெட்டுக்கிளி, பல்லி, சிறிய பாம்புகளை உணவாகக்கொள்கின்றன. இனப்பெருக்கக் காலத்தின்போது, இறகுகளை விரித்துக்கொண்டு வானில் வட்டமிட்டு வளைந்து நெளிந்து பறப்பதால், ரோலர் எனப் பெயர் சூட்டப்பட்டது. மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பனைமரங்களில் மரங்கொத்திகளால் உண்டாக்கப்பட்ட பொந்துகளில் கூடு கட்டும். பட்டுப்போன மரத்தைப் பிளந்து அதன் துவாரங்களில் சிதைந்த மரக்குச்சிகளை வைத்தும் கூடு கட்டும். ஆண், பெண் இரண்டுமே 17 முதல் 19 நாள்களுக்கு முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன.

தூக்கணாங்குருவி (Weaver bird)

நம்ம ஊரு பறவைகள்!

ந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவலாக இருக்கும் பறவை. ஊர்ப்புறங்களில் நீர்நிலைகளின் ஓரமாக மரங்களில், இலைகளையும் நார்களையும் கோத்துக் கூடுகளை அமைக்கின்றன. மந்தையாகக் கூடிவாழும் பழக்கமுடையவை. வெயில் காலங்களில் தரையிலிருக்கும் மணலில் குளியல் போடுகின்றன. தாவரங்களிலிருந்து மற்றும் தரைகளில் சிதறிக் கிடக்கும் விதைகளை உணவாக உட்கொள்ளும். அறுவடைக்குப் பின் உடைக்கப்படும் தானியங்களிலிருந்து சிதறும் நெல்களைப் பொறுக்கியெடுக்க வயல்களில் கூட்டம் கூட்டமாக வரும். குட்டிக் குட்டித் தவளைகள், பல்லிகளையும் பிடித்துச் செல்கின்றன. முக்கியமாகத் தாய்ப் பறவை, குட்டிகளுக்கு ஊட்டும். வயல்வெளிகளில் வளரும் பல பூச்சியினங்களையும் சாப்பிடுவதால், விவசாயத்துக்கு உதவி செய்கின்றன.

நீளவால் காக்கை (Rufous Treepie)

நம்ம ஊரு பறவைகள்!

துருப்பிடித்த நிறத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் ருஃபஸ் (Rufous) எனப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவலாகக் காணப்படும். கார்விடே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் குரல் இனிமையாக இருக்கும். விவசாய நிலங்கள்,  திறந்த புல்வெளிகள், தோட்டங்களில் காணப்படும். பூச்சிகள், தாவரங்கள், விதைகள், பழங்கள், முட்டைகள், சின்னச் சின்னப் பறவைகள் என்று அனைத்தையும் சாப்பிடும். சில சமயம் கரிச்சான், சிலம்பன் போன்றவற்றுடன் சேர்ந்து உணவு வேட்டையாடும். காட்டுமான்களின் உடலிலிருக்கும் உண்ணிப்பூச்சிகளைச் சாப்பிடும். இதுவும் விவசாயின் தோழனே!

-க.சுபகுணம் 

நம்ம ஊரு பறவைகள்!

*பறவைகளில் 9600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.