Published:Updated:

ஏன்? எப்படி? எதனால்?

ஏன்? எப்படி? எதனால்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏன்? எப்படி? எதனால்?

கு.லிபிவர்ஷினி, சு.உ.சவ்பாக்யதா

ஏன்? எப்படி? எதனால்?
ஏன்? எப்படி? எதனால்?

பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஏன்? எப்படி? எதனால்?

மற்ற நிறங்களைவிட, மஞ்சள் நிறம் சட்டென்று கண்களுக்குப் புலப்படும். இருள் விலகாத அதிகாலை நேரத்திலும் பளிச்சென்று கண்களுக்குத் தெரியும். இதனால், விபத்துகள் தவிர்க்கப்படும். கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபிராங்க், நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இதை வலியுறுத்தினார். 1933ஆம் ஆண்டு, வட அமெரிக்காவில் பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. காலப்போக்கில் பிற நாடுகளிலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறின.

உலகின் சிறந்த நீர் சுத்திகரிப்பு கருவி மண்பானை... எப்படி?

ஏன்? எப்படி? எதனால்?

மண்பானையில் குடிநீரை ஊற்றிவைத்தால் 5 மணி நேரத்துக்குள் நீரில் உள்ள தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை உறிஞ்சிவிடும். மண்ணில் இயற்கையாகவே தாதுக்களும் மினரல்களும் உள்ளன. அவை நீருக்கு சக்தியை அளிக்கின்றன. ஆகவே, உலகின் சிறந்த நீர் சுத்திகரிப்பு கருவியாக மண்பானையைச் சொல்லலாம்.

உடல்நலக் குறைவுக்காக மருத்துவரிடம் சென்றால், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் சிலவற்றை உணவுக்கு முன்னும் உட்கொள்ளுமாறு சொல்வது ஏன்?

ஏன்? எப்படி? எதனால்?

பல மாத்திரைகள் வயிற்றுக்குள் சென்று அமிலத்தை அதிகரிக்கும். அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது உடம்புக்குள் உறுப்புகளை பாதிக்கும். வயிற்றுக்குள் உணவு இருந்தால் அமிலத்தை கட்டுப்படுத்திவிடும். மற்ற கலவையின் எதிர்வினையைத் தவிர்க்க, சில மாத்திரைகளை உணவுக்கு முன்பு உட்கொள்ள வேண்டும்.