Published:Updated:

திறந்தவெளி அறிவுச் செல்வம்

திறந்தவெளி அறிவுச் செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
திறந்தவெளி அறிவுச் செல்வம்

திறந்தவெளி அறிவுச் செல்வம்

திருச்சியின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது, ‘லிட்டில் ஃப்ரீ லைப்ரரி’ எனப்படும் திறந்தவெளி நூலகம். இந்தியாவின் முதல் திறந்தவெளி நூலகம் இதுதான். திருச்சி நகரில் புத்தூர் ஆபீஸர்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள இந்த நூலகத்தை, திருச்சி மாநகராட்சி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கியுள்ளது. அங்கே ஒரு விசிட் அடித்தோம்.

திறந்தவெளி அறிவுச் செல்வம்

அழகான அலமாரிகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். ‘கற்றதை அளித்து கல்லாததை பெறுவீர்’, ‘புத்தகம் வைக்கவும் புத்தகம் பெறவும் புதிய களஞ்சியம்’ என்று ஆங்காங்கே பொன்மொழி பலகைகள். நூலகத்தின் மையத்தில் இருக்கைகளும், நூலகம் அருகிலேயே இருக்கைகளுடன்கூடிய வீதி பூங்காவும் ரம்மியமான சூழலை அளித்தது. நூலகப் பொறுப்பில் இருந்த அபிநயா என்பவரிடம் பேசினோம்.

‘`மற்ற நூலகத்துக்கும் இந்த நூலகத்துக்கும் என்ன வித்தியாசம்?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திறந்தவெளி அறிவுச் செல்வம்

‘‘இந்த நூலகத்தில் 2,000 புத்தகங்கள் உள்ளன. 24 மணி நேரமும் செயல்படும். மாநகராட்சிப் பனியாளர்களில் ஒருவர் மாற்றி மாற்றி பொறுப்பில் இருப்பார்கள். ‘கிவ் எ புக்... டேக் எ புக்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அதாவது, இங்குள்ள புத்தகத்தில் எதையாவது எடுத்துச்செல்ல வேண்டுமென்றால், அவர்களிடம் உள்ள ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு செல்ல வேண்டும்!’’

‘`இந்த நூலகத்தை அமைக்க எவ்வளவு செலவாச்சு?’’

‘`20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாடம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தலாம். தவிர, பொதுமக்களும் படிக்கும் வகையிலான புத்தகங்கள் உள்ளன.’’

‘`இப்படி ஒரு நூலகத்தை அமைக்கும் யோசனை எப்படி வந்தது?’’

‘`வெளிநாடுகளில் ‘லிட்டில் ஃப்ரீ லைப்ரரி’ என்பது மிகவும் புகழ்பெற்றது. இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில், எல்லாவற்றையும் இணையதளம் மூலமே பெற்றுவிட நினைக்கிறார்கள். அது சுலபமாக இருக்கலாம். ஆனால், நூலகத்துக்கு வந்து நமக்குத் தேவையான ஒரு விஷயத்தை பல நூல்களைப் புரட்டி தேடும்போது ஒரு விஷயத்தின் அருமை, அதற்கான உழைப்பு எத்தகையது என்று புரியும். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று மட்டும் இல்லாமல் இப்படி இயற்கைச் சூழலில் புத்தகத்தை வாசிப்பது மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். தவிர, வருகிற மனிதர்களிடம் நேருக்கு நேராக உரையாடலாம். இதனால், பல வகை மனிதர்கள் பற்றி அறியமுடியும். வீட்டுக்குள்ளேயே ஸ்மார்ட்போன், கேம் என இருப்பதைத் தவிர்த்து, உங்களை போன்ற பள்ளி மாணவர்கள் இந்த நூலகத்துக்குத் தொடர்ந்து வந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றார் அபிநயா.

திருச்சி சுட்டிகளே... திறந்தவெளி நூலகத்தில் இயற்கை காற்றுடன் அறிவுச் செல்வத்தையும் வாங்கிக்க ரெடியா?

-சுட்டி டீம் படம்: தே.தீட்ஷித்

திறந்தவெளி அறிவுச் செல்வம்

* ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர், நாற்பதுக்கும் மேலான மொழிகளில் சொல் ஆராய்ச்சி செய்துள்ளார்.