Published:Updated:

சொன்னதும் மாறியதும்!

சொன்னதும் மாறியதும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொன்னதும் மாறியதும்!

சு.உ.சவ்பாக்யதா, ச.அட்சயா

சொன்னதும் மாறியதும்!

தற்போது சொல்வது: ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்.

முன்னோர்கள் சொன்னது: ஆடிக்காத்துல அம்மையும் பறக்கும்.

சித்திரை, வைகாசி, ஆணி மாதங்களில் வெயில் காரணமாக அம்மை போன்ற நோய்கள் ஏற்படும். ஆடி மாதத்தில் குளிர்ச்சியான காற்றால், அம்மை நோயும் பறந்துபோகும்.

சொன்னதும் மாறியதும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது சொல்வது: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

முன்னோர்கள் சொன்னது: அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால், அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

அன்புடன் தர்மம் செய்பவரிடம் நடு இரவில் போய் கேட்டாலும் உதவி செய்வான்.

தற்போது சொல்வது: ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.

முன்னோர்கள் சொன்னது: ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.

ஆயிரம் மூலிகைச் செடிகளின் வேரை எடுத்து மருந்து செய்பவன், மருத்துவத்தில் பாதி நோய்களை குணப்படுத்துவான்.

 கதை சொன்னவரின் கதை!

சொன்னதும் மாறியதும்!

ன்று வரை உலகம் முழுவதும் பிரபலமாகச் சொல்லப்படுவது, முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிடும் கதை. இந்தக் கதையைச் சொன்னவர், ஈசாப் என்ற கிரேக்கர்.

கி.மு.600ஆம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் கிரோஸஸ் என்ற அரசனிடம் அடிமையாக இருந்தவர் ஈசாப். அழகற்ற அவரது தோற்றத்தை அனைவரும் கிண்டல் செய்தனர். எனவே, தன்னைச் சுற்றியுள்ள மக்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அவர்களின் செய்கைகளை விலங்குகளுக்குக் கொடுத்து, வேடிக்கையான கதைகளாகச் சொல்ல ஆரம்பித்தார். அவரது கதைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

பொன் முட்டையிடும் வாத்து, திராட்சை புளிக்கும் என்ற நரி, என நிறைய கதைகள் சொன்னார். இவை வழி வழியாகச் சொல்லப்பட்டு, மேலும் பலரின் கதைகள் இணைந்து, ஈசாப் நீதிக் கதைகள் என்றானது.