Published:Updated:

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

‘‘ரொம்ப பசிக்குது. ஏதாவது கொடுங்க’’ என்று யாராவது  கையேந்தும்போது, பலரும் அலுத்துக்கொள்வார்கள். ஆனால், ஒருவர் 26 வருடங்களாக யாரும் கேட்காமலேயே தொடர்ந்து உணவு அளித்துவருகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சி அரசு மருத்துவமனைக்கு பகல் 12 மணிக்குச் சென்றால், அந்தக் காட்சியைப் பார்க்கலாம். அன்று நாங்களும் சென்றோம். ‘அன்னதான வாகனம்’ என்கிற பெயரில் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து உணவு  பாத்திரங்கள் இறக்கிவைக்கப்பட்டன. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், அங்கேயே தங்கியிருக்கும் நோயாளிகள் வரிசையாக நிற்க, சுடச் சுட உணவுப் பரிமாற ஆரம்பித்தார்கள்.  முன்னாள் ரயில்வே ஊழியர், ரவீந்தரக் குமார் என்பவர்தான் இதைச் செய்து வருகிறார். அவரிடம் பேச்சுக் கொடுத் தோம்.

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

‘‘அப்புறம் பேசலாம் கண்ணுங்களா... இப்போ எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறணும். நீங்களும் செய்ங்க’’ என்றார்.

மகிழ்ச்சியுடன் பரிமாற ஆரம்பித்தோம். வாங்கிக் கொண்டவர்கள் மர நிழலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். சற்று நேரம் கழித்து, ‘‘ம்... இப்போ கேளுங்க பசங்களா. உங்களுக்கு என்ன தெரியணும்?’’ என்றார் ரவீந்தர்குமார் ஐயா.

‘‘இப்படி ஒரு சேவை செய்யணும்னு எப்படி தோணுச்சு?’’

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

‘‘இது என் அப்பா கோவிந்தராஜூ ஆரம்பிச்சுவெச்சது. அவரும் ரயில்வே ஊழியர்தான். ஒருமுறை இங்கே ட்ரீட்மென்ட்ல இருந்த சொந்தக்காரரைப் பார்க்க வந்தார். பல நோயாளிகள் சுடுநீருக்கும் கஞ்சிக்குமே வழி தெரியாம கஷ்டப்படறதைப் பார்த்தார். தினமும் சுடுநீர், கஞ்சி காய்ச்சி எடுத்துவந்து கொடுக்க ஆரம்பிச்சார். கொஞ்ச நாளில் அவரோடு நானும் வர ஆரம்பிச்சேன். எங்களின் இந்தச் சேவையைப் பார்த்து இன்னும் சிலர் பணம் கொடுத்து உதவ, ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி உணவு கொடுக்க ஆரம்பிச்சோம். என் அப்பா இறந்த பிறகும் நான் தொடர்ந்து செஞ்சுகிட்டிருக்கேன். இதுக்காக நான் செய்துட்டிருந்த ரயில்வே வேலையையும் விட்டுட்டேன். பென்ஷன் பணமே குடும்பம் நடத்த போதும்ன்னு முடிவு பண்ணிட்டேன்’’ என்றார்.

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

இந்தச் சேவையில் இவரின் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறது. தினமும் காலையில் 3 மணிக்கே எழுந்து கஞ்சி காய்ச்சி எடுத்துவந்து 6 மணிக்குக் கொடுக்கிறார். இவர் மனைவி வீட்டில் உணவை தயார்செய்துவிட, மதியம் 12 மணிக்கு உணவு வழங்கப்படுகிறது. இதில், நண்பர்களும் உதவி செய்கிறார்கள்.

‘‘ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை மூலம் இதைச் செய்துட்டிருக்கோம். பலரும் அவங்களின் பிறந்தநாள் மற்றும் விசேஷ நாளை முன்னிட்டு நன்கொடை கொடுப்பாங்க. பல நாள்கள் பணம் இல்லாமல் சிரமப்பட்டாலும், எப்படியாவது சமாளிச்சு கொண்டுவந்துடுவோம். நாலு பேர் மனசு நிறைய வாழ்த்தறதைவிட பெரிய சொத்து நமக்கு தேவையில்லை பிள்ளைகளா’’ என்கிறார் மகிழ்ச்சியுடன்.

-சுட்டி டீம்,  படங்கள்: தே.தீட்ஷித்

மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து!

* உலகில் சுமார் 2,000 தாவர இனங்கள் உணவுக்காகப் பயிரிடப்படுகின்றன.